சில நாடுகளில் உணவுகள் மேலதிகமாகி குப்பையில் போடப்படும் அதே வேளை இன்னும் சில நாடுகளில் உணவுப்பஞ்சத்தால் மனிதர்கள் இறப்பதற்கும் முதலாளித்;துவ, கம்யூனிச பொருளாதாரக்கொள்கைகளே
காரணமாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற இஸ்லாமிய பொருளாதார முறை பற்றிய விளக்கக் கூட்டத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று அமெரிக்கா போன்ற பல நாடுகளில் மேலதிகமாக உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை கடலில் போடுவதன் மூலம் தமது உற்பத்திப் பொருட்களுக்கான கிராக்கியை தக்க வைத்துக்கொள்ளப்பார்க்கிறார்கள். இது தமது நாட்டின் நலன் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும் மனிதாபிமானமற்ற செயலாகும். உலகின் பல நாடுகளில் உண்ண உணவின்றி மக்கள் தவிக்கும் போது தமது சொந்த நலனுக்காக உணவை கட்டுப்படுத்தும் பொருளாதார முறை மனித இனத்துக்கு விரோதமானது.
இவ்வாறான சுயநலம் சார்ந்த பொருளாதார முறை காரணமாகவே தங்கம், வெள்ளி கோதுமை என அனைத்தையும் நாடுகள் கட்டுப்படுத்தி ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு இவற்றை கொண்டு செல்ல முயடியாது என்றும் அவற்றை கொண்டு செல்ல வேண்டுமாயின் அரசுக்கு வரி செலுத்த வேண்டும் எனவும் சட்டமியற்றியுள்ளன. இத்தகைய சட்டத்தால் ஏழைகளே பரிதிக்கப்படுகின்றனரே தவிர வசதியுள்ளவர்கள் அல்ல. அதே போல் ஆளுந்தரப்பார் எத்தனை கிலோ தங்கமாயினும் பச்சை சேனல் மூலமாக கடத்தி அவர்கள் உயர் நிலையில் வாழ்வதை காணலாம்.
தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜெகத்தினை அழிப்போம் என்றான் பாரதி. இங்கு தனி ஒருவனின் உணவுக்காக முழு ஜெகமும் அழிக்கப்படுவதே இன்றைய பொருளாதார முறையாகும்.
இத்தகைய பொருளாதார முறையை நீக்கி மனிதனுக்கு உதவும் அனைத்தையும் அனைவரும் அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்லும் பொருளாதார முறையை இஸ்லாம் நடை முறைப்படுத்தி காட்டித்தந்துள்ளது. மக்காவுக்குச்செல்லும் உலகளாவிய முஸ்லிம்கள் ஆகுமான அனைத்துப்பொருட்களையும் மக்காவுக்கு கொண்டு வர முடியும் என்பதையும் அங்கிருந்து எந்தப்பொருளையும் பெற்று உலக்கு கொண்டு செல்ல முடியும் என்பதையும் இஸ்லாம் காட்டித்தந்தது. இதன் காணமாக இலங்கையின் திரவியங்கள் மக்காவில் இலகுவாக கிடைத்ததையும் அதே பொருள் மக்காவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு சென்றதையும் கண்டுள்ளோம்.
இத்தகைய திறந்த பொருளாதாரத்தின் மூலம் முஸ்லிம்கள் வர்த்;தகத்தில் கொடி கட்டிப்பறந்ததுமின்றி ஏழைகளின் தோழர்களாகவும் இருந்தனர்.
ஆனால் இன்றைய முதலாளித்துவ பொருளாதாரா முறையால் செல்வந்த நாடுகளே நன்மை பெற்றுள்ளன. ஏழை நாடுகள் இன்னமும் அதே நிலையிலேயே உள்ளன. இந்த நிiலில் மனிதனின் இத்தகைய வக்கிர பொருளாதார தடைகளை ஒரு முஸ்லிம் ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதனுக்குத்தேவையானவற்றை அவன் எந்த நாட்டுக்கும் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக அரசாங்கங்கள் தடை போட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிமுக்குக்கிடையாது. அவன் விரும்பினால் இத்தகைய சட்டங்களுக்கு கட்டுப்படலாம். ஆனால் அதற்கு கட்டுப்படாதவனை இறைவன் கண்டிக்கமாட்டான் என்பதை இறை சட்டங்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.
மனிதனுக்கு ஆகுமானதை கடத்துங்கள் என நாம் சொல்லவில்லை. ஆனால் அவ்வாறு கடத்துபவன் இறைவன் முன்பாக குற்றவாளி அல்ல என்பதைத்தான் உறுதியாக சொல்கிறோம்.

Post a Comment