BREAKING NEWS

TNA – முஸ்லிம் மூவருடன் தேசியப்பட்டியல் பேச்சுவார்த்தை








author image
ஊடுருவி

ஐ.ம.சு.கூட்டமைப்பின் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள அதிருப்தி நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு –  முஸ்லிம்களின் வாக்குகளை தம்பக்கம் இழுத்துக்கொள்ளும் முயற்சியில் தற்போது தீவிரம் காட்டி வருவதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்ட அரசியல் பிரமுகர்கள்  சிலர் இந்த காய்நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகின்றது.

இதற்கமைய , தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யும் ஆசை வார்த்தைகளையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் கூட்டமைப்புக்கு சார்பான முஸ்லிம்கள் ஊடாக வெளிநாட்டில் வதியும் சந்தர்ப்பம் மற்றும் பெரும் தொகைப்பணம் வழங்குதல் போன்ற ஆசைகளையும் ஊட்டி வருவதாக நம்பகமாக அறியக் கிடைக்கின்றது.

இந்த அடிப்படையில், அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கிய முஸ்லிம் புள்ளிகளை அணுகி மேற்படி ஆசை வார்த்தைகளை கூறி பேரப்பபேச்சில் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றனர்.


குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான சம்மாந்துறையைச் சேர்ந்த ஒருவருடனும் கல்முனைத் தொகுதியைச் சேர்ந்த ஒருவருடனும் கூட்டமைப்பு சார்பான புலம் பெயர்ந்த முஸ்லிம்களின் சார்பில் இருவர் பேச்சு நடத்தியிருப்பதாக அறியமுடிகின்றது.

அதுமட்டுமன்றி  கட்சி ஒன்றை நடத்தி வரும் அம்பாரை மாவட்ட உலமா ஒருவருடனும் குறித்த தமிழ்த் தேசியத்தரப்பு பலசுற்று பேச்சுக்களை நடத்தி முடித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டு கனிசமானளவு முஸ்லிம்களின் வாக்குகளை கூட்டமைப்புக்கு  பெற்றுக்கொடுத்தல் என்பதே முதல் நிபந்தனையாகும்.

அவ்வாறு பெற்றுக் கொடுக்கும் வாக்குகளை பொறுத்தே இவருக்கான தேசியப்பட்டியல் நியமனத்தை கூட்டமைப்பு உறுதி செய்யும் என இந்தப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோரால்; முன்வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இணங்கி தேர்தலில் போட்டியிட முன்வரும் பட்;சத்தில் இவர்களுக்குரிய தேர்தல் செலவு உட்பட அனைத்து செலவுகளையும் கூட்டமைப்பு சார்பான புலம் பெயர் தமிழர்கள் பொறுப்பேற்கவுள்ளனர்.

அத்துடன் இவர்களுக்கு பெரும் தொகை பணமும் முற்பணமாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, கூட்டமைப்பின் மேற்சொன்ன ஆசைவார்த்தைகளுக்கு மயங்;கியிருக்கும் மேற்படி மூன்று நபர்களில் ஒருவர் அதிகம் அதிகமாக முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் மு.கா எம்.பி க்களுக்கு எதிராகவும் கருத்துக்களை பரப்ப முகநூல் மற்றும் இணையத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர்கள் முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசியல் ஒற்றுமைகளையும் காட்டிக்கொடுத்து  அற்ப சலுகைகளுக்காக சோரம் போவார்களா?    

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar