BREAKING NEWS

ஜம்இய்யதுல் உலமாவின் கேகாலை மாவட்ட கிளை நிர்வாக சபை தெரிவு


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதேச, மாவட்ட கிளைகளை புனரமைக்கும் பணியில் ஜம்இய்யாவின் தலைமையகம் ஈடுபட்டுள்ளது. கேகாலை மாவட்ட கிளையின் தலைவர் மெளலவி ஜஃபரின் மறைவுக்குப் பின் நீண்ட காலம் தெரிவு செய்யப்படாமல் இருந்த
கேகாலை மாவட்ட ஜெம்இய்யதுல் உலமாவின் நிர்வாகம் கடந்த (07) ஞாயிற்றுக்கிழமை கிரிங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற மாவட்ட கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.
தலைவராக மெளலவி எம்.ஜே. அஹமத் ஹுஸைன் ஹாபிஸ் செயலாளராக மெளலவி ஏ.சீ.எம். இக்பால், பொருளாளராக மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். உப தலைவர்களாக மெளலவி அக்ரம் ஜுனைத், மற்றும் மெளலவி லியாஉத்தீன் முப்தி உப செலயாளராக காஸி நீதவான் மெளலவி ஏ.எல்.ஏ.எம். பெளஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
ஹிங்குளோயா கிளையின் காஸி நீதவான் மெளலவி பெளஸ் தலைவராகவும், மெளலவி எம்.என்.எம். அன்பஸ் செயலாளராகவும், மெளலவி உஸாமுதீன் பொருளாளராகவும் தெல்கஹகொட கிளையின் தலைவராக மெளலவி லியாஉத்தின் முப்தி செய லாளராக மெளலவி அனீஸ் பொருளாளராக மெளலவி அபூ சுஊத் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar