கண்டி மாநகர சபை ஐ.தே.க. உறுப்பினர் எஸ். சிவஞானம் ஐ.ம.சு.மு.வில் இணைந்து கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் (10) மாலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அவர்களை சந்தித்த சிவஞானம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பூரண ஆதரவுகளை வழங்குவதுடன், தொடர்ந்தும் ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுத்து வரும் பணிகளுக்கு உதவிகளை புரியவுள்ள தாகவும் இவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
எஸ். சிவஞானம் கடந்த 10 வருட காலமாக கண்டி மாநகர சபையில் உறுப்பினராக உள்ளார்.
Post a Comment