BREAKING NEWS

திட்டம் போட்டு திருடற கூட்டம்….

அமைச்சரவை கூட்டத்தை பகிஷ்கரிக்கும் ரிஷாத் பதியுதீன்
அமைச்சர் ஹக்கீமுடன் நாளைக் காலை அவசர சந்திப்பு!
-------------------------------------------------------------------------------------------
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனுக்குமிடையில் நாளை (04) காலை 6.30 மணிக்கு
அவசர சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெறுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் சமூகத்தின் நலன் கருதி இரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்துக்கு வரும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் தனது கட்சி ஒரு தீர்மானத்துக்கு வருவதில் சிக்கலான நிலைமைகள் தோன்றியுள்ளன. அத்துடன் நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலும் நான் கலந்து கொள்ளமாட்டேன். மேலும் அமீர் அலி விடயத்திலும் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar