ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸிற்கும் இடையில் இன்று காலை இடம்பெறவிருந்த சந்திப்பு இறுதி
நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது என அக்கட்சியின்
முக்கியஸ்தரொருவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கலந்துகொள்வதிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நழுவியமையினாலேயே சந்திப்பு இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இந்த சந்திப்பிற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் காலை 7.30 மணிக்கு அவரது இல்லத்திற்கு அழைத்திருந்தார்.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் கலந்துகொள்வதிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நழுவல் போக்கினை கடைப்பிடித்துள்ளனர். இதன் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் காலை இடம்பெறவிருந்த கூட்டத்தில் அக்கட்சியின் எந்தவொரு உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.
இதன் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் காலை 9 மணிக்கு நடைபெறவிருந்த கூட்டத்தினை கட்சித் தலைவர் இறுதி நேரத்தில் இரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் குறித்த சந்திப்பின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு இடம்பெறவிருந்தது.

Post a Comment