பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் உலமா கட்சியினால் முன் வைக்கப்பட்டுள்ள உலமா கட்சியின் முஸ்லிம் மக்கள் சம்பந்தமான கோரிக்கைள்:
1. நாட்டில் சமூகங்களுக்கிடையில் அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் நீதியும் நியாமும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
2. ஏந்தவொரு இனமும் இன்னொரு இனத்துக்கெதிராக இனவாதம் பேசினால் அல்லது தூஷித்தால் அவர்கள் எத்தகையபாகுபாடும் இன்றிசட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.
3. நாட்டில் உள்ளஅனைத்துமத ஸ்தலங்களும்; 2010ம் ஆண்டுவரைஎந்த இடத்தில் இருந்ததோஅந்த இடத்தைவிட்டு எக்காரணம் கொண்டும் இடமாற்றவும் கூடாது,அவற்றுக்குசேதம் ஏற்படுத்தவும் கூடாது.
4. அதேபோல் முஸ்லிம்களின் பாரம்பரிய நிலங்கள் அவர்களுக்கே மீளவும் கையளிக்கப்படவேண்டும். குறிப்பாகவடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் குச்சவெளி, கிண்ணியா குரங்குபாஞ்சான், மட்டக்களப்பின் உன்னிச்சை போன்ற கிராம மக்களின் காணிகள் உட்பட ஒலுவில் ஆலிம் நகர்,பொத்துவில் மக்களின் வயற்காணிகள் உட்பட அனைத்து காணிகளும் மீள் வழங்கப்படும் என்றஉத்தரவாதம் பகிரங்கமாக தரப்படவேண்டும்.
5. 1992ம் ஆண்டுக்குப்பின் வழங்கப்படாதிருந்த மௌலவி ஆசிரிய நியமனம் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் 2005ம் ஆண்டு உலமாகட்சி செய்து கொண்ட தேர்தல் ஒப்பந்தப்படி 2010ம் ஆண்டு 151 மௌலவிமார்களுக்குமட்டுமேவழங்கப்பட்டது. மேலும் 1000 மௌலவிமாருக்கான தேவை பாடசாலைகளில் உள்ளதால் அவை வழங்கப்படும் என்ற உத்தரவாதம் தரப்படவேண்டும். அத்துடன் இது விடயத்தில் போட்டிப்பரீட்சைக்கான வினாத்தாள் அமைவு உலமாகட்சியின் மேற்பார்வையில் நடக்கவேண்டும்.
6. அரசாங்க பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படும் ஆல்ஆலிம் பகுதி ஒன்று பகுதி இரண்டு என்பன க. பொ. த சா. தரம், உ. தர பரீட்சைக்கு சமாந்திரமானதாக ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.
7. பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு தனித்தனியான மதவிவகார அமைச்சு வழங்கப்படவேண்டும். இப்படியான அமைச்சு மாகாண சபைகளுக்கும் கொண்டு வருவது நல்லது என்ற சிபாரிசையும் உலமா கட்சி முன் வைக்கிறது.
8. பள்ளிவாயல்களில் பணிபுரியும் இமாம்கள் முஅத்தின்மாருக்கு அரச சம்பளம் வழங்கப்படு:ம் வகையில் முஸ்லிம் மதவிவகார அமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும். அத்துடன் இவர்களை நியமிப்பது பணி நீக்கம் செய்வது என்பனவும் மேற்படி அசை;சினூடாகவே நடத்தப்படவேண்டும். இதற்கு ஏற்றாற்போல் பள்ளிவாயல் நிர்வாகம் இவர்களின் ஊதியத்தை அமைச்சிடம் கையளிக்கவேண்டும்.
9. கல்முனை, சம்மாந்துறை பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளை இணைத்து புதியதோர் தேர்தல் மாவட்டம் உருவாக்கப்படவேண்டும். இதற்கான கச்சேரி கல்முனையில் அமையப்பெற வேண்டும்.
10. வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் உயிர் உடமைகள் வர்த்தக நிலையங்களுக்குரிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும். அத்துடன் அம்மக்களின் வீடு, காணியில்லால்லாப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
11. கிழக்கு, வடக்கு தென்னிலங்கையில் அரச காணிகள், அரச தொழில்கள் பங்கிடப்படும் போது இன விகிதாசாரம் பேணப்படவேண்டும்.
12. அரச ஊடகங்களின் ஊழியர்கள் நியமனத்தில் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைக்கு பல்கலைக்கழக பட்டம் பெற்ற மௌலவி ஒருவரே பணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும். இவரது நியமன விடயத்தில் உலமா கட்சியின் ஆலோசனை பெறப்படவேண்டும்.
13. முஸ்லிம்களின் பிறப்பு இறப்பு பதிவாளர், காதி நீதிவான்கள் நியமனத்தின் போது மௌலவிமாருக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
14. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்படாமல் நீதி மன்றுக்கு பதில் சொல்லுதல், அமைச்சர்களின் செயலர்களை நியமிக்கும் அதிகாரத்தை அமைச்சர்களுக்கு வழங்கல் போன்ற திருத்தங்கள் மட்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
15. விகிதாசார தேர்தல் முறை தொடர்ந்தும் இருக்க வேண்டும். தேவை என்றால் தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறையை ஐம்பதுக்கு ஐம்பது என கொண்டு வரலாம்.
16. சஊதியினால் நுரைச்சோலையில் கட்டப்பட்ட 500 வீடுகளும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
மேற்படி கோரிக்ககைளை ஏற்கும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் கட்சிகள் அமைப்புக்கள் உலமா கட்சியின் மேற்படி கோரிக்கைளை முன்வைத்து தமது அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என உலமா கட்சி கோருகிறது. அதேபோல் உலமாக்களும் முஸ்லிம்களும் உலமாக்களின் தலைமையிலான உலமா கட்சியுடன் ஒற்றுமைப்படுவதன் மூலம் இவற்றை இலகுவாக வென்றெடுக்க முடியும்.

Post a Comment