முகநூல் மற்றும் சமூக வலைய தளங்க ளினூடாக பொய் யான, பொறுப்பற்ற தகவல்கள் பரப்பப் படுகின்றன.
இத னால் மோசமான நிலைமையே ஏற்படும். என்னைப் பற்றி தெரிவிக் கப்படும் செய்திகளை தூசளவேனும் நான் பொருட்படுத்த வில்லை என
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடை பெற்ற ஐ. ம. சு. மு. ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவது உறுதியாகியுள்ளதால் எதிர்த்தரப்பின் பைத்தியம் உக்கிரமடைந்துள்ளது. இதனால் இணையத்தளங்கள் ஊடாக பொய்ப் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. ‘பேஸ் புக்’ தகவல்களை மக்கள் நம்புவதில்லை. ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவதை விரும்பாத சக்திகளே இவ்வாறு பொய்ப் பிரசாரம் செய்கின்றன.
மைத்திரிபாலவை விட சந்திரிகாவையும் ஐ. தே. க.வையுமே தோற்கடிக்க வேண்டும். மேலைத்தேயத்துக்கு தலைசாய்க்காது அணிசேரா கொள்கையுடன் ஐ.நா.வில் தைரியமாக பேசிய ஜனாதிபதியை இந்த சக்திகளால் தோற்கடிக்க முடியாது.
Post a Comment