தேசிய பத்திரிகையான சுடர் ஒளி பத்திரிகையின் கிழக்கு மாகாண அம்பாறை, மட்டக்களப்பு பிரதேச ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று அக்கரைப்பற்று ரீ.எப்.சீ. கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஏ.அரூன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பத்திரிகையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆர்.ஜெனதன், கல்விச்சுடர் ஆசிரியர்களான எஸ்.எல்.மன்சூர், ஏ.எச்.எம்.இஜாஸ் மற்றும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன், தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பிரதேசங்களில் ஊடகப் பணியினை செய்யும் ஊடகவியலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அவர்களின் குறை, நிறைகளைப் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் அவர்களுக்கான பிரச்னைகளுக்கு பத்திரிகையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆர்.ஜெனதன் மற்றும் பிரதம ஆசிரியர் ஏ.அரூன் ஆகியோரினால் தீர்வும் அளிக்கப்பட்டது.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஊடகவியாளர்களின் பிரச்சினைகள் பற்றி பல கருத்துக்களை முன்வைத்ததைத் தொடர்ந்து பல ஊடகவியலாளர்களும் தங்களின் கருத்துக்களையும் முன் வைத்தனர்.



Post a Comment