BREAKING NEWS

ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸ்


உலமா கட்சியின் பொதுமக்களுக்கான பிரிவாக இயங்கி வந்த முஸ்லிம் மக்கள் கட்சியின் பெயர் ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸ் என பெயர் மாற்றம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
07.12.2014ல் கட்சியின் தலைமையகத்தில்
நடைபெற்ற கட்சியின் உயர் சபை கூட்டத்திலேயே உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் படி ஐக்கிய முஸ்லிம் காங்கிரசின் தலைவராக கலாநிதி முபாறக் அப்துல் மஜீத், செயலாளராக மௌலவி பத்றுத்தீன், இணைச்செயலாளர்களாக ஹனான் முபாறக், மற்றும் எம் இஸ்ஸதீன் அவர்களும் பிரதி தலைவராக அத்னான் அப்துல் மஜீத், உப தலைவர்களாக மௌலவி அஸ்வர் பாக்கவி, மௌலவி அமீர் இப்றாகீம், மௌலவி ஸெய்னுதீன், மௌலவி அப்துர் ரஊப், மௌலவி நிஹால், மௌலவி சுஹ{ர்தீன், தேசிய அமைப்பாளராக அன்வர் இப்றாகீம், பொருளாளராக முஹம்மத் முஜாஹித், கொள்கை பரப்பு செயலாளராக மௌலவி முஸம்மில் அபு சாலி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதே வேளை ஐக்கிய முஸ்லிம் காங்கிரசின் உலமாக்களுக்கான பிரிவாக முஸ்லிம் உலமா கட்சி அதாடர்ந்தும் இயங்கும் எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.  

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar