(ஐ.ஏ. காதிர் கான்)
சீனாவின் பிரதான விமானசேவையான “எயார் சைனா” (Air China)
கொழும்பிற்கும், சென்ட் ஜோவிற்கும் இடையிலான நேரடி விமானசேவைகளைஇ எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து
ஆரம்பிக்கவுள்ளதாகஇ சிவில் விமானசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நேரடி விமானசேவைகள்இ வாரத்தில் நான்கு நாட்கள் இடம்பெறவுள்ளதுடன்இ சென்ட் ஜோவில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையின் முதன்மையான விருந்தோம்பல் சேவை வழங்குநரான ஜெட்வின்ங் (துநவறiபெ) விமானசேவைஇ சீனாவின் “எயார் சைனா” (யுசை ஊhiயெ) உடன் இணைந்து இச்சேவையை முன்னெடுக்கவுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே முன்னெடுக்கப்படும் முதன்மையான விமானசேவை இதுவாகும்.
விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர் சட்டதரணி பைஸர் முஸ்தபா இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது கூறியதாவது :
“சிறந்த பண்பாடுஇ சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற விடயங்களில்இ இது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் ஒரு அம்சமாகும். கடந்த வருடம் இலங்கைக்கு 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைஇ கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் கனிசமான அளவு அதிகரித்துள்ளது.
சீன சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கான வருகையைஇ இந்த புதிய விமானசேவையின் மூலம் இவ்வருடம் முதல் எதிர்வரும் காலங்களில் கிரமம் கிரமாக மேலும் அதிகரிப்போம். நமது நாட்டின் சுற்றலாத்துறையை எதிர்காலத்தில் முன்னேற்றகரமான மற்றும் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தரும் வகையில் மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment