BREAKING NEWS

ஜீ சி ஈ சாதாரண பரீட்சையில் கணக்கில் சித்தியில்லை; என்றால் உயர்தரம் முடியாது. புதிய அரசின் முட்டாள்த்தனம்.

கணித பாடம் கட்டாயம்
க. பொ. த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதாயின் கணித பாடம் கட்டாயமாக சித்தியடைதல் வேண்டும். உயர்தர பரீட்சைக்கு கணித பாடம் தேவையில்லை என கடந்த அரசு கொண்டு வந்த திட்டம் முற்றாக ஒழிக்கப்படுவதாக
அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச பாடசாலைகளும் ஒழுங்குபடுத்தப்படு வதற்கென தனியான பிரிவொன்று கல்வி அமைச்சில் ஏற்படுத்தப்படவுள்ள தாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து சர்வதேச பாடசாலைகளும் முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர கல்வி அமைச்சுடன் எவ்வித தொடர்புகளும் இல்லாத நிலையிலேயே உள்ளன. இவை வர்த்தக ரீதியாக செயற்படுகின்றன. இதனை முழுமையாக கண்காணிக்க தனியான பிரிவு ஏற்படுத்தப்படும்.வருடம் தோறும் சர்வதேச பாடசாலை களுக்கு கல்வி அமைச்சு அனுமதிப்பத்திரம் வழங்கும். பாடசாலையின் தரம் மற்றும் மாணவர்களின் கல்வித் தரம், கற்பிக்கும் முறை, ஆசிரியர்களின் தரம், தகுதி என்பன தொடர்பாகவும் இந்த விசேட பிரிவு ஆய்வுகளை மேற்கொள்ளும்.
கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இதுதொடர்பாக நேரடியாக சென்று ஆராய்ந்து அதனடிப்படையிலேயே வருடாந்தம் அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். எதனோல் இறக்குமதி செய்பவர்கள் சர்வதேச பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar