State Minister Faizer Musthafa receives his duty Today at Sethsripaya
.புதிய அரசாங்கத்தின் சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்ட பைசர் முஸ்தபா அவர்கள் தனது அமைச்சுப்பொறுப்பை இன்று வெள்ளிக்கிழமை 16-01-2015 பிற்பகல் 2 மணிக்கு பொறுப்பேற்கிறார். பத்தரமுலைலையில் உள்ள புதிய அமைச்சு கட்டிடத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
ராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா 2008 முதல் 2014 டிசம்பர் வரை பல அமைச்சுக்களை பொறுப்பேற்று நடத்தி வந்தார். சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர், சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர், சுற்றாடல் பிரதி அமைச்சர், தொழில் நுட்ப ஆராச்சி பிரதி அமைச்சர், முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் என கடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அமைச்சு பதவி பெற்று நாட்டுக்கு பல சேவைகள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 2001ம் ஆண்டு முதல் கன்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

Post a Comment