BREAKING NEWS

இன்றைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் சந்திப்பு

அஸ்ரப் ஏ சமத்
 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராசபக்சவும் தற்போதைய  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் சபாநாயகர் வாசஸ்தலத்தில் தனித்தனியாக இருவரும் சந்தித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. .

இச் சந்திப்பின்போது ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி மைத்திரி ஆதரவாளர்கள், மகிந்த ஆதரவாளர்கள் என இரண்டாகப்ப பிரிவதை தவிர்த்து ஸ்ரீ.ல.சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்றம் கூடுவதற்கு முன் கையளிப்பதாக தெரிவித்துள்ளார்.  இன்று மகிந்த ராஜபக்சவுடன் இருந்த பாரளுமன்ற உறுப்பிணர்கள் சிலர் ஜனாதிதிபதியை சந்திக்க இருந்தனர். அச் சந்திப்பை ஜனாதிபதி இடை நிறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் 100 நாள் வேளைத்திட்டத்தின் கீழ் மைத்திரபாலவுக்கு இலகுவாக பாராளுமன்றம் ஊடகா கொண்டு செல்வதற்கு இரண்டில் 3 பெரும்பாண்மை பலம் கிடைத்துள்ளது.  இதனால் யாப்புமுறை மாற்றம். சுயாதீன கமிசம் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா போன்ரு மகிந்த ராஜபக்சவும் சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளார்.  ஆனால் கட்சியின் செயலாளர், பொருளார் பதவிகளையும் மைத்திரியே மாற்றியமைப்பதற்கும் இனக்கம் காணப்பட்டது. ஆனால் -ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் யாப்பில் யார் ஜனாதிபதியாக இருக்கின்றாறோ அவரே கட்சியின் தலைமை பதவியை வகிப்பார் என சொல்லப்பட்டுள்ளது.  அத்துடன் ஆட்சி அதிகாரம் இல்லாத மகிந்தவிடம் இருப்பதை விலகி மைத்திரியுடன் சேர்வதற்கே  ஒரு சிலரைத் தவிர ஏனையோர் குறியாக இருந்தனர்.


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar