(ஐ. ஏ. காதிர் கான்)
இலங்கையின் முதல்தர மற்றும் குறைந்த சிக்கன விமானசேவையான மிஹின்லங்காஇ பிராந்தியத்தின் விமானசேவை கைத் தொழிற்துறையில் எழுந்துள்ள கேள்விகளை எதிர்கொள்ளும் வகையில்; “சர்வதேச
விமான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்” ஒன்றினை ஆரம்பித்துள்ளதாகஇ சிவில் விமானசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய முனைப்பானதுஇ ஏனைய சர்வதேச விமானசேவைகளைச் சேர்ந்த அனுபவமற்ற மற்றும் ஏ320 ரக தரப்படுத்தப்பட்ட விமானிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மிஹின்லங்காவின் மிகவும் தேர்ச்சி பெற்ற விமானப் பயிற்சியாளர்களிடமிருந்து பணி நேரத்துடன் கூடிய பயிற்சிகளையும்இ வானோடிகளுக்குப் பெற்றுக் கொள்வதற்கான வழி வகைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சிவில் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் ஆலோசனைகளின் பிரகாரம் இந்தப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் குறித்து மிஹின்லங்கா பயிற்சியளித்தல் மற்றும் தர நிர்ணய தலைமை விமானி கெப்டன் தேமிய அபேவிக்கிரம கருத்துத் தெரிவிக்கும்போது கூறியதாவது;
இன்று இந்திய துணைக் கண்டத்திலுள்ள பல விமானசேவைகள் பூரணமான பயிற்சி பெற்ற முதல்நிலை அலுவலர்களுக்கான கேள்வியினால் மிகுந்த சிரமத்திற்குட்படுகின்றது. இதனைக் கருத்திற் கொண்டே நமது உள்நாட்டு விமானிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளவில்லை.
அத்துடன் நமது வளங்களை உபயோகித்து எந்த நாட்டவராக இருந்தாலும் அவர்களுக்குப் பயிற்சியளிப்பது என்ற முடிவினை மேற்கொண்டோம். எமது பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் பலர்இ ஏற்கனவே தத்தமது நாடுகளிலுள்ள விமானசேவைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பினைப் பெற்றவர்களோயாகும்.
நம்மிடமுள்ள பயிற்சியளிக்கும் விமானிகள் (பயிற்சியாளர்கள்) எமது முதல்நிலை விமானிகளுக்கு அளிக்கும் உள்ளக தொடர் பயிற்சிகளை வழங்குவதைத் தவிர்த்துஇ ஏனைய நேரங்களில் ஓய்வு நிலையிலேயே உள்ளனர் என்றார்.
Post a Comment