BREAKING NEWS

த. கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவசர அழைப்பிற்கிணங்க இன்று 22 ஆம் திகதி வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளனர்.
இச்சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று பி. பகல் 4.30 மணிக்கு நடைபெறுமென கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கிழக்கு மாகாண சபையின் புதிய ஆட்சி அமைவதிலுள்ள சிக்கல் நிலைமையினை தீர்த்து வைக்குமுகமாக ஜனாதிபதி இவ்வழைப்பை விடுத்திருக்கலாமென நம்பப்படுகிறது.
இதேவேளை நேற்று புதன்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களான இரா. சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண சபையின் த. தே. கூட்டமைப்பு உறுப்பினர்கள் சமகால விடயம் தொடர்பாக கலந்துரையாடினர்.
கிழக்கு மாகாண சபையில் இன்று எழுந்துள்ள அசாதாரண நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வதென்பது தொடர்பாக கருத்துக்கள் அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டன. முதலமைச்சர் மற்றும் மாகாண ஆட்சி அமைப்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டன.மு. காவுடனான பலகட்டச் சந்திப்பு களையடுத்து கிடைத்த ஏமாற்றத்தின் விளைவாக இச்சந்திப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இது எப்படியிருப் பினும் இன ஐக்கியத்தைப் பேணும் வகையில் நல்லதொரு முடிவையே நாம் எடுப்போம் என கூறப்பட்டது. இன்று பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar