BREAKING NEWS

சஊதி சுனாமி வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கவும். உலமா கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் நல்லாட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக சஊதி அரசால் அக்கரைப்பற்றில் கட்டப்பட்ட 500 வீடுகளும் உடனடியாக கிடைக்கப்பெறும் என தாம் நம்புவதாக
உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்தார். இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேலும் தெரிவித்தததாவது,
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் நல்லாட்சியை முன்கொண்டு செல்லும் போது அதற்கு ஒத்தழைப்பதே சமயத்தலைவர்களின் கடமையாகுமே தவிர அதற்கு முட்டுக்கட்டையாக இருக்க முடியாது.  இதன் காரணமாகவே முஸ்லிம் சமயத்தலைவர்களின் தலைமையிலான உலமா கட்சி இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறினோவின் நல்லாட்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை தந்து கொண்டிருக்கிறது. அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதிலிருந்து நல்ல பல விடயங்களை நாடு கண்டு கொண்டிருப்பது மகிழ்வை தருகிறது.
இந்த வகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக சஊதி அNபிய அரசால் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் 500 வீடுகள் கட்டப்பட்டு அவை வழங்கப்படாமல் இன்று பழுதடைந்த நிலையில் இருப்பதை இந்த இடத்தில் நாம் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். அந்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமைக்கு காரணம் கடந்த காலத்தில் இனவாதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட ஆட்சியேயாகும். அந்த வீடுகளை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் உலமா கட்சி பல தடவைகள் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கை எடுப்பதாக எமக்கு எழுத்து மூல பதில்கள் வந்ததே தவிர எதுவும் நடக்கவில்லை.
மேற்படி வீடுகளை குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கென வழங்க வேண்டாம் என்ற தடை நீதி மன்றத்தில் உள்ளது. அப்படியாயின் சுனாமியால் பாதிக்கபட்டு வீடு கிடைக்காத ஏனைய இன மக்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவற்றை வழங்கி இப்பிரச்சினையை இலகுவாக நீதி மன்ற உத்தரவின்படி தீர்த்திருக்க முடியும். ஆனாலும் கடந்த அரசில் அனைத்து முஸ்லிம்கட்சிகளும் அங்கம் வகித்தும் இதனை பெற்றுத்தர முடியாமல் போனது துரதிஷ்டமாகும். நாம் அறிந்த வரை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களில் இன்னமும் நிரந்தர வீடின்றி இருப்போர்  முஸ்லிம்களேயாவர்.
இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது விடயத்தில் தலையிட்டு இந்த வீடுகளை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைப்பதன் மூலம் இலங்கையில் நல்லாட்சி மலர்ந்துள்ளதை சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்ட முடியும். அந்த வகையில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பதாக இந்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட நடவடிக்கை எடுக்கும்படி கௌரவ ஜனாதிபதியையும் பிரதமரையும் முஸ்லிம் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar