BREAKING NEWS

இராஜாங்க அமைச்சர் நாளை மத்தள செல்கிறார்

 (ஐ.ஏ.காதிர்கான்)

சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாஇ நாளை (24) சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மத்தள –விமான நிலையத்திற்கான விஜயமொன்றினை மேற்கொள்கிறார். கடந்த
அரசாங்கத்தின்போது மத்தள –விமான நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகம் வீண் விரயம் தொடர்பாக ஆராய்வதற்காகவே அமைச்சர் மத்தள செல்கிறார். ஊழல் மோசடிகள் மற்றும் எதேச்சத்தனமாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தொழில் பெற்றுக்கொடுத்தமை தொடர்பாகவும் இதன் போது ஆராயப்படவுள்ளது. மத்தள -விமானநிலையம் ஆரம்ப காலமுதல் இதுவரை காலமும் நட்டத்தில் இயங்கிவருவது குறித்தும் இங்கு விசேடமாக உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படவுள்ளது அமைச்சின் செயலாளர் டி. சரணபால அமைச்சு மற்றும் கட்டுநாயக்க -மத்தள விமான நிலையங்களின் அதிகாரிகள் ஊடக செயலாளர் மஹேந்திர ஹரிச்சந்திர உதவி ஊடக செயலாளர் (தமிழ்)ஐ ஏ காதிர்கான் ஆகியோரும் இவ்விஜயத்தின் போது சமூகமளிக்கவுள்ளனர்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar