தெரிவித்தார். காலிமுகத்திடலில் நேற்றுக் காலை திருப்பலி பூசையை நிறைவேற்றிய திருத்தந்தை இலட்சோப இலட்சம் மக்கள் மத்தியில் மறையுரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் விசுவாசத்தில் உறுதிபெற்று நாட்டின் அமைதிக்கும், நீதிக்கும், ஒப்புரவிற்கும் பாரிய பங்களிப்பை வழங்க வேண்டும். என கேட்டுக்கொண்ட பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ். அதற்காக தாம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பரிசுத்த பாப்பரசர் காலிமுகத்திடலில் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார். இலங்கையின் முதலாவது புனிதராக அருளாளர் ஜோசப்வாஸ் அடிகளாரை திருநிலைப்படுத்தும் இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் திருப்பலியில் தொடர்ந்தும் மறையுரையாற்றிய பரிசுத்த பாப்பரசர்,
மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும் என இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஏசாயா இறைவாக்கினர் குறிப்பிட்டுள்ளார். இது புகழ்ச்சிமிக்க தீர்க்கதரிசனமாகும். இயேசுகிறிஸ்துவின் நற்செய்தி போதனைகள் உலகின் எல்லைகள் அனைத்தையும் சென்றடைவதை இறைவாக்கினரான ஏசாயா இதன் மூலம் முன்னறிவித்துள்ளார். அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதர் நிலைக்கு உயர்த்தும் பெருவிழா இத்தருணத்தில் ஒரு சிறப்பான அர்த்தத்தைக் கொடுக்கிறது.
திருச்சபையின் வரலாற்றில் காணப்படும் எண்ணிலடங்கா மறை பரப்பாளர்களைப் போன்றே புனித ஜோசப்வாஸ் அடிகளாரும் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்... என்ற இயேசுவின் கட்டளைக்குத் தம் வாழ்க்கையினூடாகப் பதிலுரைத்தார்.அவர் தமது முன்னுதாரண வாழ்க்கை மூலம் நாட்டு மக்களை வளர்ச்சியிலும் உரிமைப் பேற்றைப் பெறுவதிலும் உறுதிப்படுத்தினார்.
புனித ஜோசப் வாஸ் அடிகளாரில் அன்பு நிறைந்த கடவுளின் அதிசக்திமிக்க அடையாளத்தைக் காண்கின்றோம். இலங்கை மக்கள் மீது கொண்ட அன்பினால் அவர் கோவா நகரிலிருந்து இலங்கைக்கு வந்தார்.இங்கு மதக் கலாபனைகள் நிலவியதாக அவர் மாறு வேடத்தில் தோன்றி கத்தோலிக்க மக்கள் மத்தியில் தமது குருத்துவக் கடமைகளை நிறைவேற்றினார். துன்பப்பட்டவர்கள் மற்றும் நோயுள்ளவர்கள் மீது அதீத அக்கறை கொண்ட அவர். ஆற்றிய சேவை கண்டி மன்னனின் புகழுக்கு உரித்தானது. இது அவர் மறை பணியாற்றுவதற்கான சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது.
கண்டியை கேந்திரமாக்கிக் கொண்டு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் தமது சேவையை விரிவாக்கி அயராது உழைத்த ஜோசப்வாஸ் அடிகளார் தமது 59வது வதில் இறைபதம் அடைந்தார். இத்தகைய அர்ப்பணிப்புள்ள அருளாளரை புனிதராக உயர்ததுவது தகுதியானதே. ஜோசப் வாஸ் அடிகளார் முன்மாதிரி யாகத் திகழ்ந்தவர். அவரைப் போன்றே கடவுளுக்கும் மக்களுக்கும் சேவைறாற்ற தம்மை அர்ப்பணித்துச் செயற்படும் குருக்கள், துறவியர் பெருமளவில் இப்போதும் கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ளனர்.
ஜோசப் வாஸ் அடிகளாரை வழிகாட்டியாக நோக்குமாறு நான் பரிந்துரைக்கின்றேன். அவர் எல்லைகள் கடந்து இயேசுவை வெளிப்படுத்தவும் பிறரை அன்பு செய்யவும் எமக்குக் கற்பிக்கின்றார். அத்துடன் புனித ஜோசப்வாஸ் அமைதிக்கான பயணத்தில் சமயப் பிரிவினைகளை கடந்து செயற்பட §ண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றார். இறைவனிடம் அவர் கொண்டிருந்த அன்பானது அயலவர்களை நோக்கிய பிளவுபடாத அன்பைப் பகிர அவருக்கு உறுதுணையானது.
தேவைகள் உள்ளோர் எவராக இருந்தாலும் அவர்களுக்குப் பணிபுரி வதையே அவர் முதன்மையாகக் கொண்டிருந்தார். இலங்கைத் திருச்சபையும் அதனைப் பின்பற்றிச் செயற்படுவது பெருமைக்குரியதாகும். இனம், மதம், சமூக நிலைகளுக்கப்பால் சேவைகளை மகிழ்வுடனும் தாராளமாகவும் திருச்சபை வழங்கி வருவது இதில் குறிப்பிடத்தக் கதாகும். எல்லோரிடமும் திருச்சபை எதிர்பார்ப்பதும் அதுவே.
சமய சுதந்திரம் என்பது அடிப்படை மனித உரிமையாகும். ஒவ்வொரு மனிதரும் உண்மையை அறிவதற்கும் பகிரங்கமாக தமது சமய நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதற்கும் உரித்துடையவர். அழுத்தங்கள் அச்சுறுத்தலற்று வாழ சுதந்திரமுடையவர் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் படிப்பினைகளைப் போன்று உண்மையான இறைவழிபாடு என்பது பிரிவினைகள் வெறுப்பு, வன்முறைகளுக்கு மாறாக வாழ்வின் புனிதத் தன்மையையும் மற்றவர்களின் சுதந்திரத்தையும் கெளரவத் தையும் அனைவரினதும் நல்வாழ்வுக்கான அர்ப்பணத்தையும் விளைவாகக் கொடுப்பதே.
புனித ஜோசப் வாஸ் பல மத சூழலில் உண்மை நிறைந்த நற்செய்தியை எவ்வாறு வழங்குவது என்பதை உணர்ந்திருந்தார். அவரது முன்னுதாரண வாழ்க்கையைப் பின்பற்றி இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் உறுதிபெற்றவர் களாக நாடடின் அமைதிக்கும் நீதிக்கும் ஒப்புவிற்கும் பாரிய பங்களிப்பை வழங்குபவர்களாக மாறவேண்டும். அதற்கான வரம் வேண்டி உங்களை புதிய புனிதரிடம் கையளிக்கின்றேன் என்றும் பரிசுத்த பாப்பரசர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment