அனைத்து சமயங்களுக்கும் தனித்தனியான மத விவகார அமைச்சு வழங்கப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அரசாங்கம்; அனைத்து சமயங்களையும் சரிசமமாக பார்த்துள்ளமை பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என உலமா கட்சி
தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளதாவது,
சுமார் 20 வருடங்களின் பின் சகல சமயங்களுக்கும் தனித்தனியாக அமைச்சு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த அரசில் அனைத்து சமயங்களும் சமமாக பார்க்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பிரதான இரு ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலமா கட்சியினால் 16 அம்ச கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டன. இதில் 7வது அம்சமாக பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு தனித்தனியான மதவிவகார அமைச்சு வழங்கப்பட வேண்டும் என கோரியிருந்தது. இதன்படி மேற்படி அமைச்சுக்கள் வழங்கப்பட்டிருப்பது உலமா கட்சியின் அரசியல் பாதையில் கிடைத்த பெரு வெற்றியாகவே காண்கிறோம்.
பல காலம் ஐ தே கட்சியின் ஆட்சியின் போது இருந்த இத்தகைய அமைச்சுக்கள் 1994ம் ஆண்டு இல்லாமல் செய்யப்பட்டது. இதனை மீண்டும் பெற எந்தவொரு முஸ்லிம் கட்சியும் முனையாத நிலையில் முஸ்லிம்களின் மத விவகாரமும் பௌத்த மத விவகார அமைச்சின் கீழ் கடந்த ஆட்சியில் கையாளப்பட்டதன் காரணமாக முஸ்லிம்கள் பெருத்த அவமானத்தை உணர்ந்தார்கள். இந்நிலை நீங்கி சகல மதங்களுக்கும் தனியான அமைச்சுக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை கடந்த காலத்திலும் உலமா கட்சி சுட்டிக்காட்டி வந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆட்சியில் மீண்டும் இத்தகைய அமைச்சு கிடைக்கப்பெற்றது என்பது சகல மதங்களுக்கும் கிடைத்த கௌரவமாகவே உலமா கட்சி பார்க்கிறது. இதற்காக ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கும் முஸ்லிம் உலமா கட்சி தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் சொல்லிக்கொள்கிறது.

http://www.aljazeeralanka.com/2014/12/blog-post_3.html

Post a Comment