மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
அரச அதிகாரிகள் மக்கள் தொடர்பிலும்.மக்களின் பிரதி நிதிகள் தொடர்பிலும் பொறுப்பற்ற முறையில் நடப்பதாக பொதுமக்கள் தம்மிடம் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்
இது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் கவனத்;திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்து மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமது கடமைகளை பெறுவதற்கு அரச நிறுவனங்களுக்கு செல்கின்ற போது அங்கிருக்கின்ற ஒரு சில அதிகாரிகள் இம்மக்களது பணிகளை செய்து கொடுக்காமல் அவர்களை விமர்சித்தும்.அவர்கள் சார்ந்திருக்கின்ற அரசியல் தலைவர்கள் தொடர்பில் தேவையற்ற கதைகளை கூறியும் அம்மக்களை திருப்பி அனுப்புகின்ற செயல்கள் இடம் பெற்றுவருகின்றது.
இது தொடர்பில் பல முறைப்பாடுகளை மக்கள் எம்மிடம் தெரிவித்த போதும்,நாங்கள் பல அரச கூட்டங்களில் மக்களமுது பணிகளை இலகுபடுத்தும் சாதனமாக அரச அதிகாரிகள் இருக்க வேண்டும் என்ற பணிவான வேண்டுகோளை முன்வைத்த போதும்,அவை நில கடும் போக்கு அதிகாரிகளினால் நிராகரிக்கப்படுவதுடன்,பொதுமக்கள் பணிகளுக்காக அவர்களிடம் செல்கின்ற போது மிகவும் சின்னத்தனமான முறையில் இந்த அதிகாரிகள் செயற்படுவதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
மக்களின் வரிப் பணத்திலேயே நாம் ஒவ்வெர்ரவரும் சம்பளத்தை பெறுகின்றோம்.அந்த மக்களது சிரமம்,கஷ்டம்,உழைப்பு,வியர்வை சிந்தல் என்பனவே எமக்கு பணமாக கிடைக்கின்றது.அவ்வாறு உதிரத்தை உருக்கி வழங்கும் இந்த மக்களுக்கு பணி செய்வது என்பது புனிதமாகும் என தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் தமது கட்சி,நிறங்கள் மற்றும் தனிப்பட்ட கொள்கைகளை அகற்றி அரச அதிகாரிகள் அதன் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என தாம் அனைத்து அரச அதிகாரிகளிடமும வேண்டுவதாகவும் கூறினார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு மேலும் பதில் அளித்த றிப்கான் பதியுதீன்.
இந்த வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் சில எதிர்கருத்துக் கொண்ட கருத்துக்கள் சில திரிவுபடுத்தப்பட்ட அறிக்கைகளை அப்பாவி மக்களை நம்ப வைக்கும் வகையில் வெளியிடுகின்றனர்.இந்த அறிக்கைகளை பாரக்கின்ற போது இது எவ்வித உண்மையுமற்றதொன்று.எமது மக்கள் எம்முடன் தான் இருக்கின்றார்கள்.அவர்கள் தொடர்பில் சில அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களால் எவ்வித பாதிப்பும்,தடங்கள்களும் இம்மக்களுக்கும்,மாவட்டத்துக்கும் இiழைக்கப்படாது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

Post a Comment