BREAKING NEWS

முதலமைச்சர் விவகாரம். சித்தீக் காரியப்பர் பிழையாக எழுதியுள்ளார்.


அம்பாரை மாவட்டத்துக்கு முதலமைச்சர் கிடைக்காமைக்கு காரணம் அக்கரைப்பற்று மாகாண சபை உறுப்பினர் அதாவது தவமும் இன்னொரு மாகாண சபை உறப்பினரும் என்பதாக
சித்தீக்காரியப்பர் எழுதியுள்ளார். உண்மையில் தவம் இது விடயத்தில் காரணம் என்றால் அவர் தன்னிடம் இதுபற்றி பேசியதாக மு. கா தலைவர் ஹக்கீம் சொல்;லியிருக்க வேண்டும். அவர் இது பற்றி ஊமையாக இருக்கும் போது சித்தீக் காரியப்பர் இவ்வாறு சொல்வதை இஸ்லாத்தினாலும் ஏற்க முடியாது, ஊடக தர்மத்தினாலும் எற்க முடியாது. காரணம் தவம் இது பற்றி ஹக்கீமிடம் பேசும் போது சித்தீக் அங்கு இருக்கவில்லை. அப்படியாயின் சித்தீக் எப்படி இதனை எழுத முடியும்? ஆனால் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் சித்தீக் காரியப்பர் இந்த விடயத்தை பின் வருமாறே எழுத வேண்டும்.
அம்பாரை மாவட்டத்துக்கு முதலமைச்சர் கிடைக்காமைக்கு அக்கரைப்பற்று மாகாண சபை உறுப்பினரும் இ;ன்னொருவரும் என சொல்லப்படுகிறது. இது உண்மையா என்பதை மு. கா தலைவர் ஹக்கீம் பகிரங்கமாக தெளிவு படுத்த வேண்டும் என்ற எழுதியிருக்க வேண்டும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar