இனங்களுக்கு இடையில் தேசிய ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் பங்கினை வலியுறுத்தும் வகையில் புதிய ஊடக அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சகல இனங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்போடு தேசியரீதியில் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பங்களிப்புக்களை நல்கும் வகையில் ஸ்ரீலங்கா மீடியா கவுன்சில் என்ற பெயரில் இந்த புதிய அமைப்பு செயற்படவுள்ளது.
இந்த அமைப்பை முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்தாபக செயற்குழுவொன்றும் செயற்படத் தொடங்கியுள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணியும் சட்டத்துறை எழுத்தாளருமான கௌசுல் அமீன் இந்த புதிய அமைப்பின் தலைவராகவும் அல்ஜஸீறா ஆசிரியர் முபாறக் ஏ மஜீத் செயலாளராகவும் செயற்படுகின்றனர்.
ஓய்வு பெற்றசிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரைக் கொண்ட ஆலோசனை சபை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மூவினங்களையும் சேர்ந்த ஊடகத்துறை முக்கியஸ்தர்கள்,தனவந்தர்கள் உட்பட பலர் இந்தப் புதிய அமைப்பின் போஷகர்களாகப் பணியாற்றவும் சம்மதித்துள்ளனர்.
விரைவில் கொழும்பில் இதன் அறிமுகவிழாவும் ஆரம்ப அமர்வும் வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளன. இந்தப் புதிய அமைப்பில் இணைந்து இனங்களுக்கு இடையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பங்கேற்கவருமாறு அதன் ஊடக பேச்சாளர் நௌஷாட் மொஹிதீன் சகல ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள அறிமுக விழாவுக்கு முன் அதில் இணைந்து பணியாற்ற ஆர்வம் கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட துறைசார்ந்தவர்கள் ஸ்ரீலங்கா ஊடக கவுன்சில் இலக்கம் 21, சிமென்ஸ் வீதி, கொழும்பு 10 எனும் முகவரிக்கு தமது சுய விவரங்களை அனுப்பிவைக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

Post a Comment