உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றியே எமது கட்சியின் சார்பாக கிடைத்த முதலமைச்சர் பதவி இதற்கு காரணமாக அமைந்தது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிக்கு
முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஹாபிஸ் நஸிர் அஹமட்டுக்கும தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறுமு.காவின் நிதிமற்றும் கணக்காய்வுக்கான பணிப்பாளரும் அம்பாறை மாவட்டகட்சிப் பொருளாளருமான ஏ.சிஎஹியாகான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் நியமனம் என்பது எனது பார்வையில் கட்சியின் தலைமை ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் பல கோணங்களில் வருகின்ற சாதகபாதகங்களைச் சிந்தித்து எதிர்வருகின்ற தேர்தல்களில் கட்சியை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வதற்கு எடுத்த முடிவாகவே நோக்குகின்றேன். இந்தநியமனம் மிகவும் வரவேற்கதக்க நியமனம் எனநான் நம்புகிறேன்.
அத்தோடு இந்த முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஹாபீஸ்; நசீர் அஹமட் படித்த குர்ஆனை மனனம் செய்தவர் அத்தோடு எல்லோருடனும் மிகச்சிறந்த முறையில் பழகுபவர் மற்றவர்களை கௌரவப்படுத்தக் கூடியவராகவும் நான் அவரை பார்த்திருக்கின்றேன.; இச்சந்தர்ப்பத்தில் பிரேதேச வாதங்கள் பேசுவதை விட்டுவிட்டு இந்த முதலமைச்சரை வைத்து நமது ஊரை அபிவிருத்திசெய்யும் வேலைகளை செய்ய ஒன்றுபடுவோம். கட்சி எடுக்கின்ற முடிவுக்கு நாம் கட்டுப்படவேண்டும். இப்பதவியை வைத்து சமூகத்தையும் கட்சியையும் வளர்த்துச் செல்வதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் என்று முதலமைச்சரை கேட்டுக்கொள்வதாகவும் எ.சி. ஏஹியாகான்தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment