BREAKING NEWS

பொதுத் தேர்தலுக்கு தயாராகிறது சு.க


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்பொழுதிலிருந்தே அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய உபதலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்களை
ஓரங்கட்டிவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமானவர்களுக்கு கட்சியில் உயர் பதவிகள் வழங்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டை நிராகரித்த அவர் தகுதி வாய்ந்த நபர்களுக்கே உயர் பதவிகள் வழங்கப்பட் டுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதன் போது கட்சியின் முக்கிய பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் போது முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் ஓரங்கட்டப்பட்டதாக சிலர் குற்றஞ்சாட் டியிருந்தனர்.
புதிய பதவி வழங்குகையில் கட்சி உப தலைவராக இருந்த முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அந்த பதவி வழங்கப்படா ததோடு கட்சி பொருளாளர் பதவியில் இருந்த முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுக்கும் அந்த பதவி வழங்கப்படவில்லை. தேசிய அமைப் பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்த வெற்றிடத்திற்கு முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவு செய்யப் பட்டுள்ளார். கட்சி மத்திய குழு கூட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த மஹிந்த யாப்பா அபெவர்தனா கட்சியில் உரியவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் என்றோ மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானர்கள் என்றோ பார்த்து பொறுப்புகள் வழங்கப்படவில்லை. தற்பொழுது தகுதியானவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தலுக்கு இப்பொழுதிலிருந்தே தயாராக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ் மட்டத்தில் இருந்த சுதந்திரக் கட்சி நடவடிக்கைகளை பலப்படுத்த ஆரம்பித்துள்ளோம். கிராம மட்டத்தில் கட்சி செயற்பாடுகளை பலப்படுத்தி அடுத்த தேர்தலுக்காக தயாராக நேற்று முதல் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
கட்சி மத்திய குழு கூட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த கட்சி சிரேஷ்ட உபதலைவர் ஏ.எச்.எம். பெளசி, கட்சியை பலப்படுத்தி அடுத்த தேர்தலில் வெற்றியீட்ட இப்பொழுதிலிருந்தே தயாராக இருக்கிறோம். கட்சி தொகுதி அமைப்பாளர்களும் அடுத்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க வேண்டும். வேட்பு மனு குழு தகுதியானவர்களை தெரிவு செய்யும் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar