BREAKING NEWS

தமிழ் கூட்டமைப்புடன் முரண்பாடுகளை உருவாக்கிவிட்டு முரண்பாடு தீர ஆசைப்படும் முதலமைச்சர்


பல்வேறு முரண்பாடுகள் களையப்பட்டு அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதால் கிழக்குமாகாண சபையின் அமைச்சரவை அடுத்த வாரத்துக்குள் உருவாக்கப்படும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் நேற்று தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவுடன் கிழக்குமாகாண சபையின்
அமைச்சரவை இழுபறிக்கு முடிவு எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே முதலமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நீண்ட இடைவெளி, இழுபறிக்குப் பின்னர் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு முதலமைச்சராக என்னை தெரிவு செய்தமைக்கு கட்சியின் தலைவருக்கும், மாகாணசபை அங்கத்த வர்களுக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்படும் சர்வகட்சி அரசாங்கத்தை நெறியாக முன்னெடுத்துச் செல்வல்ல, கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பணிப் பெண்கள், சிற்றூழியர்களின் எண்ணிக்கை முற்றாக இடைநிறுத்துவது ஆகிய இரண்டு விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளேன்.
முதலாவதாக, கிழக்கு மாகாணசபை சகல கட்சிகளையும் கொண்ட அரசாங்கமாக செயற்படுவதால் இந்த அமைச்சரவையில் சகல கட்சிகளும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் எந்தவொரு கட்சியும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை. ஐந்து கட்சிகளைச் சேர்ந்த இந்த சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 16 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 11, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 தேசிய சுதந்திர முன்னணி ஒரு உறுப்பினருடன் செயற்பட்டு வருகின்றது.
ஆகவே எந்தவொரு கட்சிக்கும் தனியாக ஆட்சியமைக்கும் பெரும்பான்மை இல்லாமையால் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து ஆட்சியமைக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் கடந்த அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் முதல் இரண்டரை வருடம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அடுத்த இரண்டரை வருடம் முஸ்லிம் காங்கிரஸ¤ம் ஆட்சியமைக்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தின் பிரகாரமே இம்முறை முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸ¥க்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய கிழக்குமாகாண சபையில் சகல கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதால் சகல அரசியல் கட்சிகளும் அமைச்சர வையிலும் அங்கத்துவம் பெற வேண்டும். குறிப்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்த அமைச்சரவையில் அங்கத்துவம் பெற வேண்டும்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் இருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ளப்போவதாக கிழக்கு மாகாணத்தில் ஒரு சில சக்திகளால் பிழையான கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு சிலரின் சுயநல நோக்கத்தினால் பரப்பப்பட்டு வரும் இவ்வாறான கருத்துக்கள் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறும் தூரதிஷ்டமான விடயமாகும்.
மாகாணசபைக்கு தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு கட்சிகளும் சபையின் அமைச்சரவையில் அங்கத்துவம் பெறுவது அவர்களது உரிமையாகும். இதுவே சம்பிரதாயபூர்வமாகும். ஆகவே யாருக்கும் யாராலும் பதவிகளும், அமைச்சுகளும் வழங்கப்படவில்லை. மாறாக அவர் அவர்களின் உரிமைகளையே அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.
இரண்டாவது விடயமாக கிழக்கு மாகாணத்தில் 35,000 பேருக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து வெளிநாடு செல்லும் பணிப்பெண்கள், சிற்றூழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar