கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் முடிவுக்கு வர இருப்பதாகவும் இந்த வார இறுதிக்குள் புதிய முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று (4) இறுதி முடிவு எடுக்கப்பட இருந்ததாக அறிய வருகிறது.
கடந்த சில வாரங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் குறித்து வினவியபோது அவர் இது குறித்து தெரிவித்தார். ஐ. ம. சு. மு.வுடனான உடன்படிக்கையின் பிரகாரம் முதலமைச்சரின் பதவிக் காலம் 2 1/2 வருடங்களில் முஸ்லிம் காங்கிரஸ¤க்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ¤க்கு வழங்க ஐ. ம. சு. மு. இணங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜனாதிப தியுடனும் பேசியுள்ளேன். இந்த வாரத்தினுள் இந்தப் பிரச்சினைக்கு முடிவு எட்டப்படும். ஏனைய கட்சிகளும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு முதலமைச்சர் பதவி தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டு வருவதோடு இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐ. தே. க., முஸ்லிம் காங்கிரஸ் என்பன முயற்சி செய்து வருகின்றன. அவற்றுக்கிடையில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இந்த பிரச்சினை தொடர்பில் நேற்று இறுதி முடிவு காணப்பட இருந்தது.
கிழக்கு மாகாணத்தில் ஐ. ம. சு. மு.வுக்கு 7 ஆசனங்கள், மு. கா. வுக்கு 7 ஆசனங்கள், த. தே. கூ.க்கு 11 ஆசனங் கள், ஐ. தே. க.வுக்கு 4 ஆசனங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்பனவற்றிக்கு தலா மூன்று ஆசனங்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜே. வி. பி.க்கும் தலா ஒரு ஆசனங்கள் உள்ளன.
மார்ச் வரை நான்
முதல்வராக செயற்படலாம்
கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்
முதல்வராக செயற்படலாம்
கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்
கிழக்கு முதலமைச்சர் விவகாரம் ஐ. ம. சு. மு. வுக்கும் முஸ்லிம் காங்கிரஸ¤க் குமிடையிலான ஒப்பந்தப்படியே தீர்க்கப்பட வேண்டும். இதன்படி மார்ச் மாதம் வரை எனக்கு முதலமைச்சராக செயற்பட முடியும்
புதிய முதலமைச்சர் எதிர்வரும் தினங்களில் நியமிக்கப்படுவது குறித்து எனக்கு தெரியாது.
த. கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரே
முதல்வராக வேண்டும்
த. தே. கூ. பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்
த. கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரே
முதல்வராக வேண்டும்
த. தே. கூ. பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்
முதலமைச்சர் விவகாரம் குறித்து எமது கட்சி ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியது. கிழக்கில் எமக்கே பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கின்றது. தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது தான் சரியானது. முஸ்லிம் காங்கிரஸ¤க்கு முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இன்னும் உடன்பாடு
காணப்படவில்லை
கிழக்கு மாகாண ஐ. தே. க. உறுப்பினர் தயா கமகே
காணப்படவில்லை
கிழக்கு மாகாண ஐ. தே. க. உறுப்பினர் தயா கமகே
முதலமைச்சர் விவகாரத்தில் இன்னும் உடன்பாடு காணப்படவில்லை. இது குறித்து நாம் த. தே. கூ. உடனும் பேசி வருகிறோம். தமிழ் தேசிய கூட்ட மைப்பிற்கு 11 ஆசனங்கள் இருக்கிறது. ஐ. தே. க. வுக்கு 4 ஆசனங்கள் இருக்கிறது. ஐ. தே. க. முதலமைச்சர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் தொடர்ந்து முயற்சிசெய்து வருகிறோம்.
Post a Comment