BREAKING NEWS

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களுக்கு 4 மாத சம்பளம்


வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுடன் நான்காவது நாளாக நீடித்தது. கடந்த நான்கு மாதங்களாக தங்களுக்கு வழங்கப்படாதிருக்கும் சம்பளப் பணத்தை வழங்கும்படி கோரி மேற்படி ஊழியர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களுக்குரிய நான்கு மாதச் சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் நான்கு மாத காலத்துக்குரிய மொத்தச் சம்பளமும் வழங்கப்படவிருப்பதாகத் தெரிய வருகிறது.
இது தொடர்பான அறிவித்தல் கொழும்பில் இருந்து காகித ஆலை தவிசாளரால் வாழைச்சேனை காகித ஆலை நிர்வாகத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பளப் பணம் தங்களது கைகளுக்குக் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லையென ஊழியர்கள் நேற்றுத் தெரிவித்தனர்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar