BREAKING NEWS

சிகிரிய சுவரில் தனது பெயரை எழுதிய உதயஸ்ரீக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்


சிகிரிய சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிடப்பட்டுள்ள யுவதியை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தைக் கோரி மட்டக்களப்பு - சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது.
பல பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
மட்டக்களப்பு - சித்தாண்டி குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சின்னத்தம்பி உதயஸ்ரீ என்ற யுவதி சிகிரிய சுவரில் எழுதிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு வருடகால சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வறிய குடும்பத்தைச் சேர்ந்த இந்த யுவதியின் மீது கருணை கொண்டு ஜனாதிபதி அவர்கள் பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தும் வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar