வித்திலிருந்து விருட்சமாய்....
அல்குர்ஆனைக் கற்று அதனைக் கற்பித்து அதனது உண்மைத் தன்மையினை மனிதர்களிடத்தில், குறிப்பாக மாணவர் சமூகத்தில் விளங்கவைக்கும் நன்னோக்கின் பினபுலத்தில் உருவானதே எம் தாருல் குர்ஆன் லிபராஇமில் ஈமான்! இது கடந்த 15 வருடஙக்ளாக மகத்தான அளப்பரிய சேவைகளை சமூகத்தில் ஆற்றி வருகின்றது
உருவாக்கத்தின் பின்னணி
2000ம் ஆண்டின் ஆரம்ப காலங்களில் அரச, மற்றும் தனியார் கல்வி ஸ்தாபனங்கள் தங்கள் கல்வித் திட்டங்களை மீளமைத்து, நவனீ கல்விமுறைகளைப் பயன்படுத்துதலினூடாக கல்விச் செயற்பாடுகளில் முன்னேற்றஙக்ளை அடைந்து கொள்வதன் அவசியத்தை உணர்ந்தன. இதேவேளை பாரம்பரிய கல்வி முறைகளைப் பயன்படுத்தி வந்த அல்குர்ஆன் மத்ரஸாக்களும், தமது நிலையங்களில் சரியான நவீனமயப்படுத்தப்பட்ட கல்விமுறைகளின் பயனப் டடின்மையினால் பினன் டைந்த நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இந்நிலைமைகள் இவ்வாறிருக்க அப்போதைய காலங்களில் இயங்கிவந்த பல மதச்சார்பற்ற ஏனைய நிறுவனங்கள் அவர்களின் கல்வி செயற்திட்டங்களில் பயன்படுத்திய நவீன மற்றும் கவர்ச்சிகரமான கற்றல் முறைகளைக் கண்ணுற்று, அவற்றின்பால் ஈர்க்கப்பட்ட பிள்ளைகள் அந்நிறுவனங்களை நோக்கி தம் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்தார்கள். எனவே, இந்நிலைமைகளை அவதானித்த நல்லெண்ணம் படைத்த, மார்க்கப்பற்றுள்ள எம்
சகோதரர்களில் சிலர், எம் முஸ்லிம் மாணவ சமூகத்தை தாக்கிவருகின்ற இச்சீரற்ற அபாயத்தை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்க எத்தணித்தனர். எனவே குழந்தைகளிடத்தில் இறை ஈமானிய சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் அல்குர் ஆனை நவனீ கற்றல் முறைகளைப் பயன்படுத்தும் ஓர் உத்தியாகப் பயன்படுத்த கற்பிக்கும் ஒழுங்குகளை மேற்கொள்ள முன்வந்தனர்.
எனவே இத்தூய எண்ணத்தின் பின்புலத்திலே தாருல் குர்ஆன் லிபராஇமில் ஈமான் எனும் ஸ்தாபனமானது கடந்த 10.06.2000ம் திகதி அன்று கொழும்பு, ஆனந்த மாவத்த என்ற முகவரியில் ஆரம்பிக்கப்பட்டது. கடினமான
சிரமங்களுக்கு மத்தியில் போதிய நிதி மற்றும் மனித வளங்கள் இன்றி வெறுமனே 04 ஆசான்கள் மற்றும் 40 மாணவர்கள் கொண்ட இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. தூரநோக்கு, உறுதியான கொள்கை போன்றவற்றினால் மிக நுணுக்கமாகத் தீட்டப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
எமது நோக்கு இறைநம்பிக்கையுடைய உன்னத சமூகம். இந்தக் கொள்கையை எமது நிலையம் எமது முன்னோரின் வரலாற்றிலிருந்து முன்மாதிரியாய் எடுத்துக் கொண்டுள்ளது.
பாடவிதானம்:
பாடவிதானத்தைத் தயாரிப்பதில் எமது நிலையம்
சிறந்த தரம்பெற்ற வழிமுறைகளைக் கைக்கொண்டுள்ளது. சந்தைகளில் பிரசுரிக்கப்பட்டு விற்பனையாகும் புத்தகங்களுக்குப் பதிலாக, மாணவர்களுக்குப் பிடித்தமான, அவர்களால் விளங்கி ஏற்றுக்கௌ;ளும் வகையில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் அரபுமொழி, எழுத்து உச்சரிப்புக்கள், ஸஹீஹான நபிமொழிகள், மார்க்கஞானம், நம்பிக்கை, தஜ்வீத், அரபுமொழி போன்ற ஒரு முறையை கொண்டுள்ளது.
தாருல் குர்ஆன் லிபராஇமில் ஈமான் நிலையம், பாடவிதானம் மற்றும் ஏனெய அதனது நடைமுறை ஒழுங்குகள் யாவும் சமய விவகாரங்கள் அமைச்சின் கீழ் இஸ்லாமிய விவகாரம் மற்றும் வக்புகளுக்குப் பொறுப்பான திணைக்களத்தினால் அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டு, 30.07.2003 ம் திகதி அன்று உத்தியோகப+ர்வமாக அதனது அங்கீகாரத்தையும் அனுமதியையும் பெற்றது.
தெகிவளை, புத்கமுவ, வென்னவத்த மற்றும் ஸகூல் லேன் ஆகிய இடங்களில் எமது கிளை நிறுவானங்கள் உருவாக்கப்பட்டன.
எமது நிலையம் இக்கிளையை மாத்திரம் தமக்கென வைத்துக் கொணடு அதனை சிறந்த முறையில் இன்றுவரை முன்னெடுத்துச் சென்ல்கின்றது. வல்ல அல்லாஹ் எமது முயற்சிகளை வெற்றிகளாக்கி மென்மேலும் இதனை வளர்த்துச் செல்ல உதவுவானாக. இன்ஷா அல்லாஹ்.
துறைசாரா செயற்பாடுகள்:
ஒரு பிள்ளையின் தனித்துவம், தன்நம்பிக்கை என்பது வெறுமனே பாடவிதானத்தினால் மாத்திரம் கட்டியெழுப்பப்படுவதில்லை. மாறாக அவர்களது பிரதான திறமைகள் கண்டறியப்பட்டு, அவர்களது சிந்திக்கும் ஆற்றல்களை வலுப்படுத்துதலின் மூலம் பிற மக்கள் முன் அவர்களது சுய ஆளுமைகளை வெளிப்படுத்துவதற்கான களங்களை அமைத்துக் கொடுத்தல் வேணடும். எனவே இவ்விடயஙக்ளில் எமது தாருல் குர்ஆன் லிபராஇமில் ஈமான் மிகுந்த கவனத்தை செலுத்துகின்ற பல சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறுபட்ட செயற்திட்டங்களையும் அல்லாஹ்வின உதவியுடன் மேற்கொண்டு வருகின்றது.
1. மாணவர்கள் மன்றம்
2. மஜல்லதுல் ஹாஇத் (விளக்கப்பட சுவர ஒட்டிகள்)
3. மாணவரக்ளுக்கான ஊக்குவிபபு நிகழ்ச சிகள் மற்றும் பயிற்சி முகாம்கள்
4. மத்ரஸாக்களுக்கிடையே உள்ளக, வெளியக போட்டிகள்
5. விளையாட்டுப் போட்டிகள்
6. கல்விச் சுற்றுலாக்கள்
7. தேசிய ஒலிபரப்பு நிகழச்ச்ணீகளில் பங்குபெறச் செய்தல்.
8. சமூக ஒத்துழைப்புக்கள்
எமது நிலையத்தின் பணிகளும் சாதனைகளும்:
அல்லாஹ்வின் உதவியுடன் எமது நிலையம் 15 வருடகாலத்தில் பற்பல அடைவுகளைக் கண்டுள்ளது. இந்த அடைவுகள் யாவும் நிகரில்லா தியாகங்களின் வெளிபப்டடேயாகும். இந்த எமது வெறற் ணீகள் அனைத்தும் எம் நிர்வாக சபை, கல்வி அதிகார சபை மற்றும் எமது இல்லத்துடன் ஒத்துழைத்த அனைவரையுமே சாரும். இதுவரையில் எமது நிலையத்திலிருந்து சுமார் 1000 மாணவ, மாணவிகள் மத்ரஸா கற்கைநெறியைப் ப+ர்த்திசெய்துள்ளனர் என்பது இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டியதொரு விடயமாகும். அல்ஹம்துலில்லாஹ்.!
எமது நிலையத்தின் நிகழ்ச்சித் திட்டங்கள்:
1. தஃவாக்கள நிகழ்ச்சிகள்.
2. ஷரஆக மற்றும் தொழில்சாரபயிற்சிநெறிகள்.
3. கொழும்பிலுள்ள அனைத்து குர்ஆன் மதர்ஸாக்கள் கலந்துக் கொள்ளும் கலாசார போட்டி நிகழ்ச்சிகள்
4. ரமழான்கால பயிற்சி முகாம்கள்.
5. விழிப்ப+ட்டல் நிகழ்ச்சிகள்.
6. காலத்திற்கேற்ற இஸ்லாமிய விரிவுரைகள்.
7. நிவாரண வேலைத் திட்டங்கள்.
8. உலர் உணவுப் பொருள் விநியோகம்
9. இளைஞர்களுக்கான விளையாட்டுக் கழகங்கள்
எமது நிறுவனத்திற்கு தம் ஒத்துழைப்புக்களை வழங்கும் முக்கிய ஸ்தாபனங்கள் சில
1. இஸ்லாமிய இளைஞரக்ளுக்கான சர்வதேச ஒன்றியம்
2. இலங்கை இஸ்லாமிய இளைஞர் ஒன்றியம்
3. சர்வதேச இஸ்லாமிய தஃவா ஒன்றியம் - லிபியா
4. சர்வதேச பயிற்சி அபிவிருத்தி கலாச்சார நிலையம்
5. முஸ்லிம் எய்ட்
6. ஹிக்மா நலன்புரி ஒன்றியம்
7. அன்ஸாருஸ் ஸன்னா முஹம்மதிய்யா ஒன்றியம்
அதே போல் எமது நிலையத்துடன் பல முக்கிய பிரமுகர்களும் தம் ஒத்துழைப்புக்களை நல்குகின்றனர்.
1. அஷ்ஷெய்க். நாஸிர் அப்
துல்லாஹ் அல் ஹஸைன் - சவ+திஅரேபியா
2. அஷ்ஷெய்க். அல் பாழில் அப+ முஆத் போன்றோர்கள் ஆவார்கள்.
எமது எதிர்காலத் திட்டங்கள :
1. இறைஈமானியம் பெற்ற தலைவர்களை உருவாக்கும் செயற்திட்டங்கள். 2. தலைநகரின் மத்தியில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கான 02 வெளவேறான கழகங்களை நிர்மானித்தல். அவ்வொவ்வொறு கழகங்களும் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக அமையும். ப+ரணமான வாசிகசாலை. தேகாரோக்கிய விளையாட்டுக்கள் வகுப்பறைகள் விரிவுரைமண்டபம் நிர்வாக அலுவலகம் கேட்போர கூடம்
3. அனைத்து வகையான கருவிகள், வளங்கள், வசதிகளுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையம் அமைத்தல் 4. நிலையத்தில் சரவ் தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய கல்வி நடவடிக்கைகளுக்கான கடடிடம் 5. கல்வி, தஃவா தேவைகளுக்கான நிரந்தர வருமானம் பெறுவதற்கான வழிகள் மேற்கொள்ளல்
இப்பணிக்காக உதவிசெய்த யாவருக்கும் வல்ல நாயன் அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாளிப்பானாக! மறுமைநாளில் அவர்களது நல்லமல்களை மீஸான் தராசில் மிகப் பாரமானாதாக ஆக்கி அருள்வானாக!!! ஆமீன்.

Post a Comment