BREAKING NEWS

அமைச்சுப்பதவிகள் என்ற லஞ்சம்

புதிய அரசாங்கத்துள் பாரிய முரண்பாடுகள் தோன்றவாரம்பித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரியை வெல்ல வைப்பதற்காக ரணில் விக்ரமசிங்கவை இணைத்துக்கொண்ட சம்பிக்க ரணவக்க போன்றோர் 100 நாள் நெருங்குவதற்கு முன்பே தமக்குள் முரண்பட்டுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

19வது திருத்த சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. அதனை அரசை சேர்ந்த முக்கிய அமைச்சரான சம்பிக்க கடுமையாக எதிர்த்துள்ளார். அப்படியாயின் அமைச்சரவையில் எகோபித்த முடிவில்லாமல்தான் இந்த சட்டத்திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இதே போல் 25 அமைச்சர்களுக்கு மேல் நியமிப்பதில்லை என கூறிய புதிய அரசு தற்போது 70க்கு மேற்ப்டோரை அமைச்சர்களாக நியமித்துள்ளதன் மூலம் அமைச்சர்களை நியமிப்பதில் மஹிந்த கடைப்பிடித்த முறையில் நியாயம் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஊழலை எதிர்ப்போம் என கூறுகின்ற அரசாங்கம் தனது சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்காக அமைச்சுப்பதவிகள் என்ற லஞ்சத்தை வழங்கியுள்ளது. ஆக மொத்தத்தில் மஹிந்த அரசுக்கும் இந்த அரசுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. மக்கள் ஏமாந்தது மட்டும்தான் மிச்சம்.
-ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸ்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar