BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரசி;ன் பொடுபோக்கை காட்டும் அட்டாளைச்சேனை சனசமூக நிலையம்.

அட்டாளைச்சேனை சன சமூக நிலையத்தை கவனிக்கப்போவது யார்..?


(எம்.ஏ.றமீஸ்)

கடந்த 1997 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய மீலாத் விழா நிகழ்வையொட்டி முன்னாள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் ஓர் அங்கமான அட்டாளைச்சேனை மீலாத் நகரில் நவீன முறையில் அமைக்கப்பட்ட சன சமூக நிலையம் இதுவரை பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இக்கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த கதவு ஜன்னல் போன்றன திருடர்களால் களவாடப்பட்டுள்ளதனால் பறவைகள் ஆடு மாடுகளின் தரிப்பிடமாக இது காணப்படுகின்றது. இது தவிர  இக்கட்டத்தில் இரவு வேளைகளில் சமூக விரோதச் செயற்பாடுகளும் நடைபெற்று வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். துர்நாற்றத்துடன் புற்புதர்கள் வளர்ந்து காணப்படும் இச்சன சமூக நிலையத்தினை சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்திலெடுத்து பொது மக்களின் பாவனைக்கு கையளக்க முயற்சிக்க வேண்டும் என மீலாந்தகர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
---------------
அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர் இருக்கின்றார். அட்டாளைச்சேனை பிரதேச சபை மு. காவின் கையில் உள்ளது. அதன் தலைவர் நாட்டிலேயே பெரிய அமைச்சர். இருந்தும் ஒரு சனசமூக நிலையத்தை அபிவிருத்தி செய்ய முடியாதவர்கள் மாகாணத்தை நாட்டை வளப்படுத்துவார்களா? சிந்திக்க தெரியாத மக்கள் இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரசுக்கு மதிப்பு இருக்கத்தான் செய்யும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar