100 நாள் வேலைத்திட்டத்தில் மலையகத்தில் பசுமை புரட்சி ; அனைவருக்கும் காணியுரிமை
கணவன், மனைவிக்கு சம பங்கில் காணிகள் உரித்து
பதுளை மாவட்டத்தின் அடாவத்தை, சோலன்ஸ். பட்டவத்தை, மாதோலை, தெல்பத்தை, நயாபெத்தை, கசாகொல்லை. தங்கமலை, நிவ்பேக் ஆகிய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கே மேற்படி காணிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து தமது உரையில் 1993 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசவினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமைகளை வழங்க திட்டமிடப் பட்டிருந்தது. தன் பிரகாரம் நானும் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானும் 1994 ஆம் ஆண்டு நுவரெலியாவின் அத் திட்டத்தினை ஆரம்பித்த போதிலும் ஜனாதிபதி பிரேமதாசவின் மறைவினால் அதை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. அதையடுத்து இருபது வருட காலத்திற்குப் பின்னர் மைத்திரியின் ஆட்சியில் அத்திட்டம் நடைமுறைப் படுகின்றது.
அந்நிய செலாவணியின் பெரும் பகுதியை இந்நாட்டிற்குப் பெற்றுக் கொடுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் விஸ்தீரணமுள்ள காணி உரிமை வழங்குவதற்கான பத்திரங்களை வழங்க முடிகின்றது. அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா பன்னிரண்டு இலட்ச ரூபா செலவிலான தனி வீடுகளும். அரசினால் நிருமாணித்துக் கொடுக்கப்படும். மேலும் இந்திய அரசினால் 25 ஆயிரம் தனி வீடுகளை அமைக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் 370 தனி வீடுகளுக்கு பெருந் தோட்டப் பகுதிகளில் அடிக்கற்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. இது ஆரம்பம் மட்டுமே. தொடர்ந்தும் சேவைகள் மென்மேலும் விஸ்தரிக்கப்படும்.
இதே வேளை 100 நாள் திட்டத்தில் கிழக்கு வாழ் மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எத்தகைய திட்டங்களும் இந்த அரசால் முன்னெடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் முஸ்லிம்களை அரசாங்கத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் முட்டாள் முஸ்லிம் கட்சிகளின் அங்கத்தவர்களுக்கு அனைத்தையும் கொடுத்தால் போதும் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என அரசாங்கம் செயற்படுகிறது.
Post a Comment