BREAKING NEWS

ம‌ஹிந்த‌ அர‌சில் இடிக்க‌ப்ப‌டாத‌ ப‌ள்ளிவாய‌ல்க‌ள் மைத்ரி ர‌ணில் ஆட்சியில் இடிக்க‌ப்ப‌டுகிற‌தா?

ம‌ஹிந்த‌ அர‌சில் சில ப‌ள்ளிவாய‌ல்க‌ள் மீது க‌ல்லெறிய‌ப்ப‌ட்ட‌து. எந்த‌வொரு ப‌ள்ளிவாய‌லும் இடித்து த‌ரை ம‌ட்ட‌மாக்க‌ப்ப‌ட‌வில்லை. த‌ம்புள்ள‌ ப‌ள்ளிவாய‌லை இடித்து விட்டு அத‌னை வேறு இட‌த்துக்கு மாற்ற‌ நட‌வ‌டிக்கை எடுத்த‌ போது இத‌ற்கு ஹ‌க்கீம் ரிசாத் போன்றோர் ஆமாம் போட்ட‌ போது உல‌மா க‌ட்சி அத‌னை க‌டுமையாக‌ நிராக‌ரித்த‌து. ப‌ள்ளியை இட‌ம் மாற்றுவ‌து எதிர் கால்த்தில் ப‌ல‌ பள்ளிவாய‌ல்க‌ள் உடைக்கப்ப‌ட்டு இட‌மாற்ற‌ம் செய்ய‌ இச்செய‌ல் வ‌ர‌லாற்று ஆதார‌மாக‌ ஆகி விடும் என‌ க‌டுமையாக‌ எதிர்த்தோம். இத‌னை முன்னாள் ஜ‌னாதிப‌தி ம‌ஹிந்த‌ ஏற்றுக்கொண்ட‌துட‌ன் அது விட‌ய‌த்தை கிட‌ப்பில் போட்டார். அத‌ன் கார‌ண்மாக‌ இன்று வ‌ரை த‌ம்புள்ள ப‌ள்ளிவாய‌ல் அதே இட‌த்தில் உள்ள‌து. ஆனால் ப‌லாங்கொடை கூர‌க‌ல‌ ப‌ள்ளி வாய‌லை இடித்து விட்டு அத‌னை வேறு இட‌த்துக்கு மாற்ற‌ முடிவெடுத்துள்ள‌தாக‌ கூறும் க‌லாச்சார‌ அமைச்ச‌ர் நந்த‌ மித்ர‌ ஏக‌நாய‌க்க‌வின் பேச்சை உல‌மா க‌ட்சி வ‌ண்மையாக‌ க‌ண்டிக்கிற‌து.
க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ ஆட்சியில் கூட‌ நடை பெறாத‌ இவ்வாறான‌ விட‌ய‌ம் த‌மிழ் முஸ்லிம் ம‌க்க‌ளின் வாக்குக‌ளால் தெரிவான‌ மைத்திரி அர‌சில் இட‌ம் பெறுவ‌து க‌வ‌லை த‌ருவ‌தாகும்
இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் கூட‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் ஏதும் தெரியாத‌ முட்டாள்க‌ள் போன்று இருக்கின்றன‌ர்.
ஆகவே கூர‌கல‌ ப‌ள்ளிவாய‌லை இடித்து விட்டு அத‌னை வேறிட‌த்துக்கு மாற்றும் தீர்மான‌த்தை உட‌ன‌டியாக‌ அர‌சாங்க‌ம் வாபஸ் வாங்கும் வ‌கையில் இது விட‌ய‌த்தில் ஜ‌னாதிப‌தியும் பிர‌த‌ம‌ர் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வும் த‌ல‌யிட‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிறது. 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar