BREAKING NEWS

பிறந்த தினத்தில் சிறைச்சாலையிலிருந்து, பாராளுமன்றத்திற்கு, பஸில்


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
நிதிமோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து பசில் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். சிறைச்சாலை வாகனத்தில் பசில் ராஜபக்ஷ அழைத்துச் செல்வார் என தெரிவிக்கப்படுகிறது.

19ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் அடுத்து வரும் இரு தினங்களுக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விவாதத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் பசில் ராஜபக்ஷ அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரினால் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த பசிர் ராஜபக்ஷவை, எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கடுவெல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பிறந்த தினமாகும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar