BREAKING NEWS

பொதுபல சேனா மைத்திரியுடன் இணையும்?


ஜனாதிபதி மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான ஹம்பாந்தோட்டைக்கு சென்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக மஹிந்தவின் சகோதரரான சமல் ராஜபக்சவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளார்.
அத்துடன் மஹிந்தவுடன்; இணைந்து செயற்பட போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு மஹிந்தவும் மைத்திரியும் இணையும் போது கூடவே கோத்தாபய ராஜபக்சவும் மைத்திரியுடன் இணைவார் என்பதை மிக இலகுவாக தெரிந்து கொள்ள முடியும்.
அவ்வாறு கோத்தாபய ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்தால் பொதுபல சேனா மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்து விடும் என்பதை சாதாரண அரசியல் உள்ள எவரும் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு பொது பல சேனா இந்த அரசுடன் இணைந்தால்  இலங்கை முஸ்லிம்களினது நிலை எப்படி இருக்கும்? மைத்திரி ரணில் அரசை எதிர்ப்பார்களா? அதே போல் முஸ்லிம்களை ஏமாற்றும் முஸ்லிம் கட்சிகள் நிச்சயம் இதற்கொரு சாட்;டு சொல்லி சமூகத்தை சமாளிப்பார்களா, அல்லது அரசிலிருந்து வெளியேறுவார்களா?

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar