BREAKING NEWS

கொலன்னாவைப் பிரதேசத்தில் - முஸ்லீம் பாடசாலை. அமைச்சர்கள் ரவுப் ஹக்கீம் றிசாத் பதியுத்தீன் இணைந்து நடவடிக்கை. மரிக்கார் உறக்கம்.

(அஸ்ரப் ஏ சமத்)


கொலநாவை, வெள்ளம்பிட்டிபிரதேசத்தில் 40ஆயிரம் மேற்பட்ட முஸ்லீம்கள் வாழுகின்றபோதும் அங்கு முஸ்லீம்களுக்கென பாடசாலையொன்று இன்மையால்  பலவறியமாணவர்கள் பாடசாலைக்கேசெல்லாமல் இருக்கின்றனர்.அத்துடன்  அரச பாடசாலையொன்று இன்மையால் தமதுபிள்ளைகளுக்கு பாடசாலைக்கல்வியியை அளிப்பதற்கு இப்பிரதேசவாழ் பெற்றோர்கள் பாரிய இண்னல்களை எதிர்நோக்குகின்றனர்.  
இம் மக்கள் கால,காலமாக பல்வேறுஅரசியல்வதிகளுக்கு வாக்களிக்கின்றபோதிலும் அவர்களது பிரச்சினைகளையாரும் கண்டு கொள்வதில்லை.
கடந்தமேல் மாகாணசபைத் தேர்தலின்போது கூட இப்பிரதேச முஸ்லீம்கள் அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடம் மேற்படிவிடயத்தை முன்வைத்தனர்.  அதன் அடிப்படையில் கடந்தஆட்சியின்போது குறித்த பாடசாலைக்கான காணியைபெற்றுத் தருமாறுமுன்னாள் நகரஅபிவிருத்தி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயாவிடம்  அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் அவ்வாறுகாணியைபெற்றுத்தந்தால் கட்டிடத்தை நிர்மாணிக்கக முடியுமென மேல் மாகாணமுதலமைச்சர் பிரச்சன்ன ரணதுங்கவும் அமைச்சரிடம் வாக்குறுதிஅளித்திருந்தார்.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டதும் அதற்கான நடவடிக்கை முன்நெடுக்கப்படாமல் இருந்தது.
இந் நிலையில் நேற்றுகல்வியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போது அமைச்சர் றிசாத் மற்றும் ஹக்கீம் ஆகியோர் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்திடம்  இவ்விடயம் பற்றிபிரஸ்தாபித்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்பொழுதுநகர அபிவிருத்திஅமைச்சராகரவுப் ஹக்கீம் இந்தக் காணிஎனது அமைச்சின் கீழ் வருவதனால் கல்வியமைச்சு இந்தக் காணியைபெற்றுத் தருமாறுஎனக்கு கோரிக்கைவிடுத்தால் அதனைத் பெற்றுத் தருவதகாஉறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து கல்வியமைச்சின் செயலாளர் உத்தியோக ப++ர்வமாக 3-5 ஏக்கர் காணியை கொலநாவைபிரதேசத்தில் பாடசாலைN தவைக்காகபெற்றுத் தருமாறு அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு உத்தியோகப+ர்வமாக கடிதம் அனுப்பும்படிகல்வியமைச்சர் செயலாளாரைப் பணித்தார். அவ்வாறு அமைச்சர் ரவுப் ஹக்கீம் காணியை ஒதுக்கித் தந்ததும் பாடசாலைகட்டிடத்தை நிர்மாணிப்பதற்கானநடவடிக்கை எடுப்பதாககல்வியமைச்சர் அங்கு வாக்குறுதிஅளித்தார்.

இதே வேளை மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐ தே க வின் கொலன்னாவை உறுப்பினருமான மரிக்கார் து விடயங்களில் ஏன் அக்கறை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊடகஙட்;களில் மட்டும் தலை காட்டிவிட்டு இவர் நன்றாக உறங்குவதாகவே பொதுமக்கள் சொல்கின்றனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar