தமிழ் மொழியிலேயே படித்த சிலருக்கு இன்னமும் தமிழ் புரியாமலிருப்பது புதிராக உள்ளது. புரியா விட்டால் நேரடியாக கேட்கலாம் மீண்டும் விளக்குங்கள் என்று, உலமா கட்சித்தலைவர் மஹிந்தவுக்கு ஆதரவு என்பது போல் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியானதும் அவரை முதலில் வரவேற்ற மஹிந்தவுடன் இருந்த கட்சிகளில் நாமே முதன்மையானவர்கள். அவரை நாம் வரவேற்றோம், வாழ்த்து கூறினோம். ஏனெனில் அவர் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை ஏற்பதுதான் ஒரு ஜனநாயக கட்சியின் விதியாகும். அத்துடன் அவரும் 100 நாட்களுள் பல விடயங்களை சாதிப்பதாக கூறியிருந்தார். அதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டியது எமது கடமையாகும். அந்த வகையில் ஜனாதிபதியின் சில நடவடிக்கைகளை நாம் மனம்திறந்து பாராட்டவும் தயங்கவில்லை.
அப்போதும் சிலர் நாம் பல்டி அடித்து விட்டதாக கருத்துத் தெரிவித்தனர். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை ஆதரரித்த நாம் தொடர்ந்தும் மஹிந்தவுடன் இருந்திருந்தால் ஏன் இன்னமும் அவரோடு இருக்கிறீர்கள் என கேட்டிருப்பார்கள். மைத்திரிக்கு ஆதரவளிக்கிறோம் என்றால் பல்ட்டி என்கிறார்கள். இதனைத்தான் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்பது. நம்மை பொறுத்த வரை யார்; நல்லது செய்தாலும் அதனை வரவேற்போம், யார் சமூகத்துக்கு கெடுதி செய்தாலும் அதனை கடுமையாக கண்டிப்போம். இந்த எடுதுகோளிலிருந்து நாம் மாறவேயில்லை.
இந்த அரசாங்கத்தின் செயல்களை கிட்டடத்தட்ட என்பது நாள் வரை நாம் அவதானித்தோம். முஸ்லிம் சமூகத்தின் ஒரு உரிமைதானும் மீள வழங்கப்படவில்லை. அத்துடன் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் வெறுமனே மஹிந்தவை வசை பாடுவதில் மட்டுமே அரசாங்கம் காலத்தை கடத்துவதை கண்டோம். அத்துடன் அரசுக்குள்;ளேயே பாரிய வெத்துக்குட்டுகள் நிலவுவதும் பகிரங்கமான விடயம். இந்த நிலையில்தான் மஹிந்தவின் பொற்காலம் பற்றியும், இருண்ட காலம் பற்றியும் நாம் பேசினோம். இந்த இரண்டையும் ஒரு சேர பேசியும் நாம் மஹிந்தவின் ஆதரவு என கருத்துச்சொல்வது யதார்த்தம் விளங்காமையாகும்.
உலமா கட்சியை பொறுத்தவரை மஹிந்த ஆட்சியால் இரண்டு வருட இருண்ட காலத்தில் இல்லாமல் செய்யப்பட்ட முஸ்லிம்களின் உரிமைகள் இந்த அரசால் மீள வழங்கப்பட வேண்டும் என்பதாலும் அதற்காக அரசாங்கமும் அரசில் உள்ள ஹக்கீம் ரிசாத் ஆகியோரும் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும்; நாம் இருக்கிறோம். அவை நிறைவேற்றப்படாவிட்டால் மஹிந்தவின் ஆட்சிக்கும் மைத்திரியின் ஆட்சிக்குமிடையில் என்ன வித்தியாசம் என நாம் கேட்பது கட்டாயமானது.
ஆக, முஸ்லிம்களின் உரிமைகள் வழங்கப்படுமாயின் நாம் தொடர்ந்தும் மைத்திரி அரசுக்கு ஆதரவளிப்போம் என்பதை இன்னொரு தடவை அழுத்தமாக செல்லிக்கொள்கிறோம்.

Post a Comment