BREAKING NEWS

பஸில் இற்கு மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Mohamed Asmy's photo.
பிணை நிராகரிப்பு - பஸில் இற்கு மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு .
இன்று மாலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஐ எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கடுவலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . இதற்கமைவாக சற்று முன்னர் கைதிகளை ஏற்றும் பொதுவான பஸ் இன் மூலம் அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படுகிறார் -
இதே வேளை மருத்துவ காரணங்களை முன்வைத்து பசில் ராஜபக்ஷ இற்கு பிணை வழங்கப் பட வேண்டும் என அவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்ட போதும் , நீதவானால் அது நிராகரிக்கப்பட்டது , ஆனாலும் அவர் சிகிச்சை பெரும் வகையில் சிறைச்சாலை மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை வழங்க நீதிமன்றம் அனுமதித்ததற்கு அமைவாக அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார் , அத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கவும் அவருக்கு நீதிமன்றால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன் உடல் நிலை முன்னேற்றம் தொடர்பில் வைத்தியர்கள் சிபாரிசு செய்ததன் பிற்பாடே அவர் சிறைச்சாலை கைதிகள் பிரிவிற்கு மாற்றப்படுவார் ,
இதே நேரத்தில் பசில் ராஜபக்ஷ இன் கைதை கண்டித்தும் வரை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கடுவலை நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் சற்று பதட்டமான சூழ்நிலை நிலவுகின்றது ....

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar