BREAKING NEWS

கதீப், முஅத்தின்களுக்கான அமானா தக்காபுல் திட்டம்




(ஏ.எஸ்.எம்.ஜாவித்)   

 கதீப், முஅத்தின்களுக்கான அமானா தக்காபுல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தலும் கௌரவிப்பு விழாவும் ஸ்ரீ லங்கா கதீப், முஅத்தின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தேசியத் தலைவர் காரி மௌலவி எம்.ஐ. அப்துல் ஜப்பார் தலைமையில் இன்று (09) மாலை கொழும்பு-10, டி.ஆர் விஜயவர்தன மாவத்தையில் உள்ள தபால் திணைக்கள தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் மனித உரிமைகள் அமைப்பினால் சான்றிதழகளும், அமானா தக்காபுல் நிறுவனத்தினால் அமானா தக்காபுல் காப்புறுதித் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு தொகுதியினருக்கு பாப்புறுதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி எம்.என்.எம்.அஸீமினால் அமைச்சர் ஹலீம் பொன்னாடை போர்த்தியும், நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்படார். 






Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar