BREAKING NEWS

பஷில் ராஜபக்ஷவுக்கு நல்ல பக்கம் ஒன்றுமுள்ளது - UNP யின் பிரதியமைச்சர் கூறுகிறார்



நாட்டுக்காக மின்சாரக் கதிரை தண்ட னையை யும் ஏற்கத் தயார் என்றவர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையிலிருந்து கூட தப்பிக்க முயற்சிப்பதேன் என பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ன கேள்வியெழுப்பினார்.

தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகையோர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் இனங்காணப்படுள்ளதாலேயே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பஷில் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்தின் நிதியை முறையற்ற விதத்தில் கையாண்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதற்கிணங்கவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பாக ‘திவிநெகும’ நிதியத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில தகவல்களும் கிடைத்துள்ளன. மேலும் தகவல்கள் விசாரணைகளின் முடிவில் கிடைக்கும்.

சட்டத்திற்கு சகலரும் அடிபணிய வேண்டும். குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவது உறுதி.

பஷில் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை நல்ல பக்கம் ஒன்றும் உள்ளது. சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்களுக்கு விசாரணைகளின் போது அவர் தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளமையே அது.

அவரது குடும்பத்தில் ஏனையோரைப் போன்று இவர் விசாரணைக்கு பயப்படவில்லை. குடும்பத்தில் மற்றவர்கள் தப்பியோடப்பார்க்கின்றனர்.

சுதந்திரமாகக் கருத்துக்களை வெளிப் படுத்த பயப்படுகின்றனர்.

அவர்களது கையாட்களை வைத்துக் கொண்டு தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar