(மொஹொமட் ஆஸிக்)
( கண்டி அங்கும்புரை தேசிய பாடசாலைக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட தொழில்நுற்ப ஆய்வுகூடத்தை தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்கள் இன்று 19 காலை 10 மணிக்கு திறக்க விருந்த நிலையில் காலை 8.30 அளவில் மத்திய மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னனி உறுப்பினர் குனதிலக்க ராஜபக்ஷ மற்றும் பூஜாபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனுர மடலுஸ்ஸ , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம். ரஸான் உள்ளிட்ட குழுவினர் பலவந்தமாக அங்கு வந்து பலவந்தமாக அதனை திறந்து வைத்தனர்.
காலை 10 மணிக்கு அமைச்சரால் திறக்கப்பட இருந்த தொழில்நுற்ப ஆய்வுகூடத்தை காலை 8.30 அளவில் திறந்து வைத்த மத்திய மாகாண சபை உறுப்பினர் குனதிலக்க ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடாத்தினர்.
இங்கு கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் குனதிலக்க ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பின்தங்கிய பாடசாலைகளை முன்னேற்றும் நோக்குடன் மஹிந்தோதய தொழில்நுற்ப ஆய்வுகூடங்கள் அமைத்ததாகவும், அந்த வரிசையில் அங்கும்புரை பாடசாலைக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட தொழில்நுற்ப ஆய்வுகூடத்தை திறப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியை சேர்ந்த எந்த ஒரு உறுப்பினருக்கும் அழைப்பு ;விடுக்காததையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரசேன அவர்களது பெயரையாவது பெயர் பலகையில் உள்ளடக்காததையும் தாம் வண்மையாக கண்டிப்பதாகவும் அதனை எதிர்ததே இன்று தாங்கள் இவ் ஆய்வு கூடத்தை முன் கூட்டியே திறந்ததாகவும் தெரிவித்தார்.
இவர்கள் ஆய்வுகூடத்தை திறந்துவிட்டு சென்று சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு பின் அங்கு சமூகம் தந்த தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் இவ் ஆய்வு கூடத்தை திறந்து வைத்த பின் உத்தியோகபூர்வ நிகழ்வும் இடம் பெற்றது.
Post a Comment