சீதனம் என்ற தமிழ் சொல்லுக்கு கொடை, அன்பளிப்பு என்ற பொருள்படும். நமது மரபில் திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணுக்கு பெண் தரப்பார் வழங்கும் கொடையை சீதனம் என்பர். சீதனம் என்ற சொல்லுக்கு கூகுள் மொழி பெயர்ப்பில் அறபியில் மஹர் என்றே உள்ளது. மஹர் என்றாலும் கொடை என்பதே அதன் அர்த்தம். இஸ்லாமிய மார்க்க முறைப்படி மஹர் என்பது மணவாளன் மணப்பெண்ணுக்கு ஏதும் கொடுப்பதை மஹர் எனப்படும். ஆனால் குர்ஆன் மணவாளன் மணப்பெண்ணுக்கு கொடுப்பதை மஹர் என அழைக்காமல் சதக்கா என்றே அழைக்கிறது.
وآتوا النساء صدقاتهن
சதுகாத் என்றாலும் கொடை, சீதனம் என்றே பொருள்படும். ஆக, சீதனம் என்றால் ஆண் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம், பெண் தரப்பார் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம் என பொருள் படும். திருமணம் ஒன்றுக்கு மணவாளன் ஏதாவது ஒன்றை அவனது வசதிக்கேற்ப மஹராக, சீதனமாக மணப்பெண்ணுக்கு கொடுப்பது கட்டாயம். அது இன்றி திருமணம் நிறைவேறாது. அதே போல் மணப்பெண் வீட்டார் தமது வசதிக்கேற்ப அந்த பெண்ணுக்கு ஏதும் வழங்கினால் அதுவும் சீதனம் எனப்படும். இந்த வகை சீதனமும் ஹறாமானதல்ல. மாறாக நபியவர்கள் தமது மகளுக்கு தமக்கிருந்த வசதிக்கேற்ப சில பாத்திரங்களை சீதனமாக கொடுத்ததாக தெளிவான ஹதீத் உள்ளது. சீதனம் கொடுப்பது ஹறாம் என்பவர்கள் நபியவர்களும் ஹறாத்தை செய்ததாக சொல்ல வருகிறார்கள்.
சிலர் நினைக்கிறார்கள் சீதனம் என்றால் வீடு மட்டும்தான் என. இது பிழையான விளக்கம். சீதனம் என்றால் பெண்; திருமணம் முடிக்கும் போது அவளது காதில், கழுத்தில் அணிந்திருக்கும் நகை கூட அவளது தகப்பன் அவளுக்கு வழங்கிய சீதனம்தான்.
மேலும் மனைவியின் வீட்டில் கணவன் வாழலாமா என்பது பற்றி பலரும் நபிகளார் வாழ்வை பார்க்காமல் கூடாது என அடித்துக் கூறுகின்றனர். முஹம்மது நபி சல்லல்லாஹ{ அலைஹி வசல்லம் அவர்கள் பிறந்தது முதல் தனது சாச்சாமார் வீட்டில்தான் வாழ்ந்தார்கள். அன்னாருக்கு சொந்தமான வீடு இருக்கவில்லை. கதீஜா நாயகியை திருமணம் செய்தபின் நபிகளார் கதீஜாவை மற்றவர்களின் வீட்டிலோ வாடகை வீட்டிலோ வைக்கவில்லை. மாறாக கதீஜாவின் சொந்த வீட்டிலேயே நபிகளார் வாழ்ந்தார்கள்.
இவ்வாறு நான் சொல்லும் போது சிலர் சொல்லலாம் நபிகளார் கதீஜாவை மண முடித்தது நபித்துவத்துக்கு முன் என. ஆனாலும் ஜாஹிலிய்யா காலத்திலும் நபியவர்கள் இஸ்லாம் காட்டிய வழியிலேயே இறைவனால் வழி நடாத்தப்பட்டார்கள். அத்துடன் நபித்துவத்துக்கு பின்னரும் நபிகளார் கதீஜாவின் வீட்டிலேயே வாழ்ந்தார்கள். மனைவி வீட்டில் வாழ்பவன் பொன்னையன் என்றால் நபிகளாரையும் இவர்கள் பொன்னையன் என சொல்ல வருகிறார்கள்.
ஆக சீதனம் ஹறாமானதல்ல என்பதுடன் சீதனம் கொடுக்கலாம் என்பதற்கு நபியின் வாழ்க்கை மிக தெளிவாக உள்ளது.
ஒரு பெண்ணின் தகப்பன் தனக்கு என்ன முடியுமோ அதனை அந்த பெண்ணுக்கு சீதனமாக கொடுப்பது நல்லது. அந்தப்பெண்ணும் தனது தகப்பனின் பொருளாதார நிலைக்கேற்ப அதனை ஜீரணித்தக்கொள்ள வேண்டும். தனது தந்தை கடன் பெற்றாவது தனக்கு தர வேண்டும் என எதிர் பார்க்க கூடாது.
அதே போல் திருமணம் பேசும் ஒரு மாப்பி;ள்ளை தனக்கு சொந்தமாக வீடு இல்லை என்றால் அவர் மாமனிடம் சொல்லலாம் எனக்கு வீடு இல்லை என. அவர் விரும்பினால் வீடு கொடுக்கலாம். இல்லாவிட்டால் வேறு மாப்பிள்ளை பார்க்கலாம். வீடு என்றதும் சிலருக்கு மாளிகை ஞாபத்துக்கு வரும். நான் சொல்கின்ற வீடு என்பது பெண்ணின் வருவாய்க்கேற்ற வீடு. அது குடிசையாகக்கூட இருக்கலாம்.
இவ்வாறு வீடு இல்லாத மாப்பிள்ளை வீடு கேட்பது அல்லது தனது தங்கைக்கு கலியாணம் நடாத்த காசு இல்லை என்பதால் பணம் வேண்டும் என கேட்பது இஸ்லாத்தில் ஹறாமானதாக இல்லை. இவ்வாறு கேட்பதற்கு சீதனம் என்ற பெயரில்லை. ஏனென்றால் சீதனம் என்றால் கொடை. ஆக இவ்வாறு கேட்பது என்பது சதக்கா கேட்பதை போலாகும்.
உதாரணமாக மதுரசா நடாத்த, பள்ளி கட்ட பணமில்லை என நாம் பணக்காரர்களிடம் பண உதவி கேட்பது போன்றதுதான் இது. இவ்வாறு கேட்பது குற்றமில்லை. விரும்பினால் கொடுக்கலாம், விரும்பாவிட்டால் அழகிய புன்னகையுடன் மறுத்து விடலாம்.
மேலும் சிலர் சொல்கிறார்கள் சில மாப்பிள்ளைமார் அது வேண்டும் இது வேண்டும் என சீதனம் கேட்கிறார்களே என. நான் சொல்கின்றேன் இவ்வாறு கேட்பது சீதனம் அல்ல. அத்துடன் இவ்வாறு அவர்கள் கேட்டால் அவரை ஒதுக்கி விட்டு வேறு மாப்பிள்ளை தேடுவதுதானே.
ஆக மணப்பெண்ணுக்கு அவளது உறவினர் என்ன கொடுத்தாலும் அவை சீதனக்கொடையாகும், ஹலாலானதாகும். இதுதான் நபியவர்களின் வழி காட்டல்.
சுருக்கமாக சொல்லப்போனால் தகுதிக்கேற்ப வரண் பார்த்தால் சீதனப்பிரச்சினையே வராது.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கப+ரி, நத்வி,

சீ -தனம் வாங்குவது ஹலால் என்று வாதாடும் கல்முனை உலமாக் கட்சித்தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் அவர்களிடம் 10 கேள்விகள்
ReplyDeleteகௌரவ ஆலிம்ஷா அவர்களே தயவு செய்து நான் கேட்கும் 10 கேள்விகளுக்கு மட்டும் பதில் தர முடியுமா ??
1) இவ்வளவு காலமும் நாடு முழுவதும் சீ-தனம் பற்றி ஏனைய உலமாக்கள் பேசும் போதும் பத்திகைகளில், இணையதளங்களில், சமூக வலயங்களில் இது பற்றி பேசும் போது எங்கிருந்தீர்கள் ???
2) சாகிர் நாயக்,(இந்தியா) முப்தி மென்க் (சிம்பாப்வே), ஷேய்க் முஹம்மத்,(சவூதி அரேபியா ) ஷேய்க் யூசுப் எஸ்ட்ஸ், (அமெரிக்கா) பீ ஜே, (இந்தியா) யூசுப் முப்தி (ஸ்ரீ லங்கா), , கோவை அய்யூப்,(இந்தியா) போன்ற உலமாக்கள் சீ-தனம் பற்றிப் பேசுகின்றார்கள் இப்படிப் பெரிய உலமாக்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகுது இவர்களுக்கு மார்க்கம் தெரியாது நீங்கள் மட்டும் தான் மார்க்கம் தெரிந்த மேதையா ???
3) நீங்கள் கூறுவது சரியென்றால் மேலே கூறப்பட்ட உலமாக்களுடன் உங்களால் பகிரங்கமாக ஒரு ----நடத்த முடியுமா ???
4) சீ -தனம் கொடுக்க முடியாமல் சீதனத்துக்காகவே வெளி நாடுகளில் பணிப்பெண்களாகச் சென்று சீரழிந்து கொண்டிருக்கும் எமது சகோதரிகளை நீங்கள் பார்க்கவில்லையா ???
5) தன் உடன் பிறந்த சகோதரிகளுக்காக வளை குடா நாடுகளுக்குச் சென்று உழைத்து உருக்குலைந்து தங்கள் வாலிபத்தை தொலைத்து நிற்கின்ற எத்தனையோ இழைஞர்களின் கண்ணீர்க்கதைகள் உங்கள் காதுக்கு எட்டவில்லையா ???
6) சீதனம் ஹராமில்லை என்பதற்கு ஆதாரம் இல்லை என்கின்றீர்கள். பீடி,சிகரட், கஞ்சா குடிப்பது ஹராம் என்று எங்கே சொல்லியிருக்கின்றது ஆதாரத்தை தாருங்கள் ??
7) என்னுடைய சொந்த தங்கச்சிக்கு உங்களைப்போல ஒரு மௌலவியை கல்யாணம் பண்ணக் கேட்டதற்கு அவர் என்னிடம் சொன்னது எனக்கு நீங்கள் 3 ஏக்கர் காணியும் ஒரு நல்ல வீடும் தந்தால்தான் நான் உங்கள் தங்கையை மணப்பேன் என்றார் அவர் அப்படி கேட்டது சரியா ?? பிழையா ??
8) எனக்கு தெரிய சம்மாந்துறையில் சீதனம் கொடுக்க முடியாமல் கல்யாணம் என்பதே கானல் நீராகி நாற்பது வயதைத் தாண்டிய எத்தனையோ சகோதரிகள் எங்களுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்காதா என்று பெருமூச்சு விடுகின்றார்கள் இவர்களுக்கு என்ன சொல்ல போகின்றீர்கள் ???
9) எனக்கு தெரிந்த ஒரு ஏழை சகோதரிக்கு 4 பெண்பிள்ளைகள் சீதனம் கொடுக்க வசதியில்லை. ஒரு நாள் அவர் என்னிடம் சொன்னது இந்தப்பிள்ளைகள் எவனுடனாவது ஓடிப்போனால் நான் சந்தோசப்படுவேன் ஏன் என்றால் என்னுடைய இந்த நிலைக்கு அதுதான் சரி ...... இது சரியா மௌலவி ???
9) உங்களுக்கு 6 பெண்குழந்தை இருந்தால் நீங்கள் 6 பெண்பிள்ளைக்கும் சீ-தனம் கொடுக்க முடியுமா ???
10) இன்றைய நமது பகுதி நிலைமையில் உங்களைப்போல ஒரு பிரபல்யமான ஒரு மௌலவி இப்படி சீதனத்துக்கு ஆதரவாகப் பேசினால் நீங்கள் எத்தனையோ ஏழைக்குமருகளின் சாபத்துக்கும் கோபத்துக்கும் ஆளாவதுடன் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக ஒரு பாரிய பிரச்சினையாகப் பார்க்கப்படும் இந்த விடயத்தை இவ்வளவு காலமும் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருந்து விட்டு உங்களுக்கு வயது போன இந்தக் காலத்தில் காத்தான்குடி ரவூப் மௌலவி மாதிரி திடீரென இழைஞர்களை சீதனத்தின் பால் ஈர்க்கவழி வகுப்பதைபற்றிக் கவலை இல்லையா ???
உங்களுக்கு சமூகத்தில் அக்கறை ஏழைக்குமருகளின் மீது அக்கறை இருந்தால் எனது இந்தப் பத்துக்
கேள்விகளுக்கும் பதில் தாருங்கள் கௌரவ மௌலவி அவர்களே !!!