இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் மாகாணங்க்ளுக்கேற்ப வித்தியாசமானவை என்பதை அரசியலவாதிகளும், புத்திஜீவிகளும், பொது மக்களும் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. அனைத்து முஸ்லிம்க்ளும் சேர்ந்து பொது முன்னணியாக இயங்கினால் நல்லது என சிலர் சொல்கின்றனர். மேலோட்டமாக பார்க்கும் போது இது அழகாக தெரிந்தாலும் அரசியல் போராட்டத்தில் இது சாத்தியமில்லை. காரணம் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் இடங்களுக்கேற்ப வேறு படுகின்றன. அதனால் முஸ்லிம்கள் மத்தியில் பல்வேற்பட்ட கட்சிகள் அவசியம்தான். கிழக்கு மக்கள் தமத் பிரச்சினைகளை மையப்படுத்தி அரசியல் செய்ய வேண்டும். வடக்கு மக்கள் அவ்வாறே. தென்னிலங்கை முஸ்லிம்கள் ஒன்று கூடி தமது பிரச்சினைகளுக்கு எவ்வறான அரசியல் பயணம் தேவை என சிந்திக்க வேண்டும்.
தமிழ் கூட்டமைப்பு வெற்றி பாதையில் செல்லக்காரணம் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறானவை என புரிந்து வைத்துள்ளார்கள். அதனால் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் தனியாக கூட்டிணந்துள்ளன. இவற்றின் தலைமைகளும் இம்மாகாணங்களை சேர்ந்தோர்தான். அதே வேளை கொழும்பை, மலையகத்தை மையப்படுத்திய கட்சிகளை அவர்கள் தமக்குள் உள் வாங்காமல் அவற்றை தனியாக இயங்க விட்டுள்ளதன் மூலம் விடயத்தை புரிந்து செயட்படுகிறார்கள். ஆனாலும் தேவைப்படும் போது கூட்டாக பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவதட்கு அணுகூலமாக இருப்பது அவரவர் எல்லைக்குள் நிற்கும் அரசியலாகும். இதனைத்தான் முஸ்லிம்களும் கைக்கொள்ள வேண்டும். அனைத்து முஸ்லிம் கட்சிகளுக்குமிடையிலான தொடர்பு இருக்க வேண்டும். ஆனால் அவை சங்கமிக்காமல் இருப்பதே நல்லது. அதே போல் வடக்கு கிழக்கு தலைவர்களை கொண்ட முஸ்லிம் கட்சிகள் தமக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து செயட்படுவது சிறந்தது.
முபாறக் அப்துல் மஜீத்.
Post a Comment