BREAKING NEWS

மக்களிடம் கையளிக்கப்படாத மருதமுனை நூலகம்

மருதமுனை றாசீக் நபாயிஸ்

1983ஆம் ஆண்டு அக்கால ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.ஆர்.மன்ச+ர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பெரியநீலாவணை அக்பர் கிராமத்தில் சனசமூக கட்டிடம் (நூலகம்) ஒன்று கட்டிக்கொடுக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக இக் கட்டிடம் அழிக்கப்பட்டது.
அதன் பின்னர் கல்முனை மாநகர சபையின்  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் அவர்களின் பெரும் முயற்சியால் கடந்த 2013ஆம் ஆண்டு அக்கட்டிடம் (நூலகம்) அழிக்கப்பட்ட அதே இடத்தில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் ஒன்னரை வருடத்;தை தாண்டியும் மக்கள் பாவனைக்காக இன்னும் கையளிக்கப்படவில்லை. அதனால் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

படமும் தகவலும் : மருதமுனை றாசீக் நபாயிஸ்




Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar