BREAKING NEWS

ரணிலிடம் மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை - வாசுதேவ



கோபம் காரணமாக தவறுதலாக தாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கெட்டவார்த்தையால் ஏசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற அமர்வின் போது வாசுதேவ சிங்களத்தில் கெட்ட வார்த்தை பதத்தை ரணிலுக்கு எதிராக பயன்படுத்தினார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொற்பிரயோகம் தொடர்பில் சபாநாயகரும் அறிவுரை கூறினார்.

இந்தநிலையில் தாங்கமுடியாத கோபத்தின் போது கெட்டவார்த்தையை தாம் பயன்படுத்த நேர்ந்தது என்று வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.

எனவே அதற்காக மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு தற்செயலான சம்பவம் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar