ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (18) நடைபெற்ற லக் வனித்தா முன்னணி கூட்டத்தின்போது அம்பன்பொல ஞானாலோக தேரர் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தமை மகிழ்ச்சிக்குரியது என்றபோதிலும், கட்சிக்காக பாடுபட்டவர்கள் கௌரவமாக வீதியில் இறங்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேரர் கூறியுள்ளார்
கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் இன்று கட்சியை மயானத்தை நோக்கியே இட்டுச் செல்வதாகவும் ஞானாலோக தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்
தங்களது முன்னேற்றத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணம் என்பதை கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளரும் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிக்காக ஒரு துளியேனும் போராடாதவர்கள் இன்று சுகபோகங்களை அனுபவிப்பதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்ப்பார்த்ததாக தெரிவித்த ஞானாலோக தேரர், அரசாங்கத்தில் திருடர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்

Post a Comment