வில்பத்து தொடர்பில் கடந்த அரசாங்கம், செயற்பட்ட விதத்தை அனுமதிக்க முடியாது - மைத்திரி
வில்பத்து சரணாலயம் தொடர்பில் கடந்த அரசாங்கம் செயற்பட்ட விதத்தை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை வன விலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் அதிகாரிகளை இன்று சந்தித்தப் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
வில்பத்து சரணாலயம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை வன விலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் அதிகாரிகளை இன்று சந்தித்தப் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
இலங்கை வன விலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் சஞ்சிகைளின் 25 ஆவது பிரசூரம் இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்ட்டது. இந்த நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வில்பத்து சரணாலயத்தில் மன்னார் பிரதேசத்தை மையப்படுத்தி கடந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை அனுமதிக்க போவதில்லை். சரணாலயத்தின் காணிகளையே மீள் குடியேற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எமது நாட்டின் வனங்கள்கடந்த காலத்தில் யுத்தம் காணப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் தான் எஞ்சியுள்ளது. யுத்தம் காரணமாக தான் அவை எஞ்சின. யுத்தம் காணப்படாவிட்டால் அதுவும் கிடையாது. எவ்வாறாயினும் வனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

Post a Comment