BREAKING NEWS

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 109 பேர் கைச்சாத்து?


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் 109 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
ஐ.ம.சு.மு உறுப்பினர்களால் கைச்சாத்திடப்பட்ட இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்றையதினம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவிருப்பதாக டி.பி.ஏக்கநாயக்க எம்.பி தெரிவித்தார். 109 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள அதேநேரம், மேலும் நான்கு பேர் கைச்சாத்திடவிருப்பதாகவும் 113 உறுப்பினர்களின் கைச்சாத்துக்கள் பெறப்பட்ட பின்னர் இதனைக் கைய ளிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட் டார்.
முன்னதாக நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பிரதமருக்கு எதிரான நம்பிக்கை யில்லா பிரேரணையில் 100 பேர் கைச் சாத்திட்டிருப்பதாகவும், இதற்கு முன்னுரிமை அளித்து விரைவில் அதனை விவாதத் துக்கு எடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar