----------------------------------------------------------------------
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு தான் இணக்கம் தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (9) மாலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவது தொடர்பில் ஒரு போதும் நான் கருத்துகளை வெளியிடவோ இணக்கத்தை தெரிவிக்கவோ இல்லை. அத்துடன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற வேண்டுமென்ற விடயத்தில் நான் ஒன்றுபடவும் இல்லை.
பொதுசன ஐக்கிய முன்னணி நடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க முன்வந்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்திருக்க மாட்டாது என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ. நியூஸ்

Post a Comment